2025 உங்களுக்கு எப்படி இருக்கும்? - பிறந்த தேதியை வைத்து எண் கணிதம் சொல்வது இதுதான்!
ஜோதிடத்தைப் போலவே, எண் கணிதமும் ஒரு நபரின் கடந்த காலம், நிகழ்காலம் மற்றும் எதிர்காலத்தைக் கூறுகிறது. கிரகங்கள் மற்றும் நட்சத்திரங்கள் ஒருவருடைய வாழ்க்கையில் ஆதிக்கம் செலுத்துவதை போல், பிறந்த தேதியும் குறிப்பிடத் தகுந்த தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒவ்வொருவரின் பிறந்த தேதியில் இருந்தும் மூல எண் கண்டறியப்படுகிறது. ஜோதிடம் ஒன்பது கிரகங்களையும் வைத்து கணிக்கப்படுவதுபோல், எண் கணிதம் ஒன்பது மூல எண்களையும் வைத்து கணிக்கப்படுகிறது. மூல எண் என்பது உங்களுடைய பிறந்த தேதியே ஆகும். ஒருவேளை உங்களுடைய பிறந்த தேதி இரண்டு இலக்கத்தில் இருந்தால் அவற்றின் கூட்டுத்தொகையே உங்களுடைய மூல எண்ணாகும்.
ஒரு நபரின் நல்லது கெட்டது அந்த மூல எண்ணைப் பொறுத்தது என்று எண் கணிதம் கூறுகிறது. அந்த மூல எண்ணின் அடிப்படையை எவ்வாறு கணக்கிடுவது என்று பார்ப்போம். நீங்கள் மாதத்தின் 1,10,19, 28 ஆகிய தேதிகளில் பிறந்திருந்தால், உங்கள் மூல எண் 1 ஆக இருக்கும். அதாவது உங்களுடைய பிறந்த எண் 16 ஆக இருந்தால் 1+6=7 என்பதே உங்களுடைய மூல எண்ணாகும்.
பிறந்த தேதியின் அடிப்படையில் 2025 ஆம் ஆண்டு உங்களுக்கு எப்படி இருக்கும் என்பதை எண் கணிதம் மூலம் தெரிந்துகொள்ளலாம். 1, 10, 19, 28 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2025-ல் உழைத்த உழைப்பின் பலனைப் பெறுவார்கள். நேர்மறையான எண்ணம் உங்களிடம் இருக்கும். இந்த தேதிகளில் பிறந்த வியாபாரிகள் வருகிற ஆண்டு கவனமாக இருக்க வேண்டும். பெரிய அளவில் முதலீடு செய்யாமல் இருப்பது நல்லது.
2, 11, 20 மற்றும் 29 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2025-ல் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்துவார்கள். இவர்களுக்கு இந்த ஆண்டு திருமணம் கைகூடலாம். எனினும், திருமண உறவில் சில சிக்கல்கள் வர நேரிடும். கவனம் தேவை.
3, 12, 21, 30 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2025-ல் கவனமாக இருக்க வேண்டும். உங்களுக்கு சில அவசரப் பணிகள் தடைபடலாம். அதேநேரம் வரவிருக்கும் ஆண்டு ஆன்மிக நாட்டத்தை உங்கள் மனம் தேடலாம். மாணவர்கள் தேர்வுகளில் நல்ல முடிவுகளைப் பெறுவார்கள். வருமான ஆதாரங்கள் இருக்கும் என்றாலும், செலவுகளும் அதிகரிக்கும்.
4, 13, 22, 31 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களின் சில கனவுகள் 2025-ல் நிறைவேற வாய்ப்புண்டு. வியாபாரிகள், மாணவர்கள் நல்ல பலன்களைப் பெறுவார்கள். 14, 23 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு 2025-ல் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு சில பலன்கள் கிடைக்கும். தொழிலாளர்கள் நிதி ரீதியாக பலன்கள் பெறுவார்கள்.
6, 15, 24 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2025-ல் குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியைப் பெறுவார்கள். தொழிலாளர்களுக்கும் வியாபாரிகளுக்கும் 2025-ம் ஆண்டு சிறப்பாக இருக்கும். மாணவர்களுக்கும் சிறப்பாக இருக்கும். 7, 16, 25 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டில் நிறைய வளர்ச்சி வாய்ப்புகளைப் பெறுவார்கள். காதல், வேலை ஆகியவற்றில் நல்லது நடக்க வாய்ப்புள்ளது. மாணவர்களும் படிப்பில் வெற்றி காண்பார்கள்.
8, 17, 26 ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள் 2025-ல் காதலில் நிம்மதி
அடைவார்கள். ஆனால் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டும். பணி ரீதியாக
வெற்றியை எதிர்பார்க்கலாம். 9, 18, 27 ஆகிய தேதிகளில் பிறந்தவர்களுக்கு
2025-ம் ஆண்டு புதியதைக் கொண்டு வரலாம். ஆண்டின் ஆரம்பமே இவர்களுக்கு
நன்றாக இருக்கும். ஆனால் செலவு விஷயத்தில் கவனம் செலுத்துவது நல்லது.
No comments