IFHRMS 2.0 - ஜனவரி 2025 முதல் அமல் - களஞ்சியம் ஆப்பில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றங்கள் என்னென்ன? ஆணையர் விளக்க கடிதம்!!!
ஆணையர் , கருவூலம் மற்றும் கணக்குத்துறை அவர்களின் அறிவுறுத்தலின்படி ,அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியர்களின் பயன்பாட்டிற்கான களஞ்சியம் கைப்பேசி செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது . களஞ்சியம் கைப்பேசி செயலி 01 01 2025 முதல் முழுமையான பயன்பாட்டிற்கு வர இருப்பதனை தெரிவித்துக் கொள்ளப்படுகிறது . இச்செயலி மூலம் . அரசு ஊழியர்கள் தங்களின் Pay Slip , Pay Drawn Particulars முதலிய அறிக்கைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் .
மேலும் விடுப்புகள் ( தற்செயல் விடுப்பு ஈட்டிய விடுப்பு முதலியவைகளும் ) , பண்டிகை முன்பணம் மற்றும் பொது வருங்கால வைப்பு நிதி முன்பணம் ஆகியவற்றையும் இச்செயலி மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் பண்டிகை முன்பணம் மற்றும் ஈட்டிய விடுப்பு தொடர்பான செயல்முறை ஆணைகளும் உடனடியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . பொது வருங்கால வைப்பு நிதி ( CIW மற்றும் பங்களிப்பு ஓய்வுதிய திட்டம் CPS க்கான மீதத்தொகையை சரிப்பார்த்துக் கொள்ளலாம் .
ஓய்வூதியர்கள் தங்களின் வருடாந்திர நேர்காணலை இச்செயலி மூலம் செய்யலாம் . மேலும் Pension Slipy , Pension Drawn Particulars Form 16 ஆகியவற்றையும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . மேலும் களஞ்சியம் கைப்பேசி யெலியை Google Play Store po ம் பதிவிறக்கம் செய்யலாம் . இச்செயலி சம்பந்தமான சந்தேகங்களை அறிய சம்பளக் கணக்கு அலுவலகம் ( வடக்கு ) , சென்னை -0 யை தொடர்பு கொள்ளலாம் . இப்பொருள் தொடர்பான சுற்றறிக்கை வற்கனவே அனைத்து துறைகளுக்கும் சுற்றறிக்கை விடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது .
No comments