Breaking News

டிசம்பர் 11, 12ஆம் தேதி தமிழ்நாட்டிற்கு மிக கனமழை எச்சரிக்கை..!! இந்த மாவட்டங்கள் தான் டார்கெட்..!!

 


தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ஃபெஞ்சல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள், வடக்கு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது. அதிலிருந்து பொதுமக்கள் இப்போது தான் மீண்டுள்ளனர். இதற்கிடையே தான், தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது.

இந்நிலையில், வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப் பகுதி காரணமாக தமிழ்நாட்டில் வரும் 11, 12ஆம் தேதிகளில் ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இதனால், வரும் 11ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களிலும், வரும் 12ஆம் தேதி திருச்சி, பெரம்பலூர், கரூர் மாவட்டங்களிலும் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. டிசம்பர் 13ஆம் தேதி வரை கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

No comments