Breaking News

20 ரூபாய் இருக்கா..? போஸ்ட் ஆபிசில் இந்த பாலிசி எடுத்தா ரூ.2 லட்சம் கிடைக்கும்.!

 


மத்திய அரசின் பிரதம மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா என்பது நாட்டின் சாமானிய மக்களுக்கான சிறந்த விபத்து காப்பீட்டுத் திட்டமாகும். இந்தத் திட்டம் ஒரு வருடத்திற்கான தனிநபர் விபத்துக் காப்பீட்டுத் திட்டமாகும். இது ஒவ்வொரு ஆண்டும் புதுப்பிக்கப்படலாம். இது விபத்து காரணமாக இறப்பு அல்லது ஊனத்திற்கான காப்பிட்டை வழங்குகிறது. இங்கு விபத்து என்பது வெளிப்புற காரணங்கள், வன்முறை போன்ற பிற காரணங்களால் ஏற்படும் திடீர், எதிர்பாராத மற்றும் விருப்பமில்லாத நிகழ்வு. மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், இந்த திட்டம் ஆண்டு பிரீமியமாக ரூ 20 மட்டுமே செலுத்த வேண்டும்.

இத்திட்டத்தின் கீழ், காப்பீடுதாரர் ஆண்டுக்கு ரூ.20 மட்டுமே டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.2 லட்சம் வரை காப்பீட்டு பலன்களைப் பெற முடியும். சாலை விபத்தில் காப்பீடு செய்யப்பட்ட நபர் இறந்தால், நாமினிக்கு ரூ.2 லட்சம் வழங்கப்படும். ஊனமுற்றால், 1 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இந்த திட்டத்திற்கு எப்படி விண்ணப்பிப்பது..?

* திட்டத்திற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க, ஒருவர் ஜன் சுரக்ஷா யோஜனாவின் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தைப் பார்வையிட வேண்டும்.

* முகப்புப் பக்கத்தில், படிவங்களுக்குச் சென்று, PMSBY படிவத்தைக் கிளிக் செய்யவும். அப்போது புதிய பக்கம் திறக்கும்.. அந்த புதிய பக்கத்தில் விண்ணப்பப் படிவம் மற்றும் உரிமைகோரல் படிவத்தின் விருப்பங்களை காணலாம்..

* விண்ணப்பப் படிவத்திற்குச் சென்று உங்களுக்கு விருப்பமான மொழியில் பதிவிறக்கவும். பிரிண்ட் அவுட் எடுத்து உங்கள் சேமிப்பு வங்கி கணக்கு எண், மொபைல் எண், ஆதார் அட்டை எண், நாமினியின் பெயர் உள்ளிட்ட தேவையான அனைத்து விவரங்களையும் நிரப்பவும்.

* படிவத்துடன் தேவையான அனைத்து ஆவணங்களையும் இணைத்து, உங்கள் சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும் வங்கியில் சமர்ப்பிக்கவும்.

எப்படி உரிமை கோருவது? காப்பீடு செய்தவரின் மரணத்தின் போது, ​​அந்த நபரின் நாமினி வங்கி மற்றும் காப்பீட்டு அலுவலகத்திற்குச் சென்று கோரிக்கை படிவத்தை நிரப்ப வேண்டும். காப்பீடு செய்யப்பட்ட நபரின் இறப்புச் சான்றிதழை, காப்பீடு செய்த நபர் தனது சேமிப்புக் கணக்கை வைத்திருந்த வங்கிக் கிளையில் சமர்ப்பிக்க வேண்டும். செயல்முறை முடிந்ததும், காப்பீட்டுத் தொகை நாமினியின் கணக்கில் மாற்றப்படும்.

No comments