Breaking News

இதுல உங்க பெருவிரல் எந்த டைப்-ன்னு சொல்லுங்க.. உங்களோட உண்மையான குணத்தை சொல்றோம்...

 


ஒருவரது குணாதிசயங்களை பலவாறு அறியலாம். அதுவும் ஒருவரது அதிர்ஷ்டத்தை அந்நபரின் பெருவிரலின் வடிவத்தைக் கொண்டே கணிக்க முடியும். அதோடு அந்நபரின் குணாதிசயங்களைப் பற்றியும் தெரிந்து கொள்ளலாம். இந்திய ஜோதிடத்தின் ஒரு பகுதியான சாமுத்ரிகா சாஸ்திரத்தின் படி, ஒவ்வொருவரும் வெவ்வேறு கை வடிவம் மற்றும் அமைப்புடன் பிறக்கிறார்கள். இதனால் ஒருவரது கைகளே அந்நபரின் குணாதிசயங்களைப் பற்றி நிறைய கூறும்.

குறிப்பாக ஒருவரது பெருவிரலின் மேல் மற்றும் கீழ் பகுதியும் அந்நபரின் சக்தியைப் பற்றி நிறைய சொல்வதாக ஜோதிடம் கூறுகிறது. அதுவும் பெருவிரலின் மேல் பகுதி கீழ் பகுதியை விட பெரியதாக இருந்தால், அந்நபர் வலிமையானவர். அதேப்போல் பெருவிரலின் கீழ் பகுதியை விட மேல் பகுதி சிறியதாக இருந்தால், அந்நபரிடம் சிறந்த பகுத்தறியும் ஆற்றல் இருக்கும். ஒருவேளை இரண்டும் சமமாக இருந்தால், அந்நபர் வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெறுவார்.

ஒருவரது பெருவிரலின் அளவு மட்டுமின்றி, பெருவிரலின் அமைப்பும் அந்நபரின் சுவாரஸ்யமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும். நீங்கள் உங்களின் சுவாரஸ்யமான குணம் என்னவென்பதை தெரிந்து கொள்ள விரும்பினால், உங்கள் பெருவிரல் நேராக உள்ளதா அல்லது வளைந்து உள்ளதா என்று பார்த்து, உங்களைப் பற்றி படித்து தெரிந்து கொள்ளுங்கள். நேரான பெருவிரல் உங்களின் பெருவிரல் நேராக இருந்தால் மற்றும் வளைத்தாலும் வளையாமல் இருந்தால், நீங்கள் எதையும் நன்கு பகுத்தறியும் ஆற்றலைக் கொண்டிருப்பீர்கள். சற்று அதிகார உணர்வை வெளிப்படுத்துவீர்கள். உங்களைச் சுற்றியுள்ளவர்களைப் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள். உங்களை அவ்வளவு எளிதில் யாராலும் ஏமாற்ற முடியாது.
நீங்கள் நம்பும் வரை, எவராலும் உங்களை பயன்படுத்திக் கொள்ள முடியாது. உங்கள் நம்பிக்கையைப் பெறுவது என்பது சற்று கடினம். எப்போதும் விழிப்புடன் இருப்பீர்கள். ஆபத்து வருவதற்கு முன்பே அதை உணர்வீர்கள். எவ்வளவு கடினமான சூழலாக இருந்தாலும், கனிவாக இருப்பீர்கள். தன்னம்பிக்கை அதிகம் கொண்டவர். ஒழுக்கம் மற்றும் எதையும் சரியாக செய்ய வேண்டும் என்று நினைப்பவர். முக்கியமாக மன உறுதியுடன் இருப்பீர்கள்.

உங்களின் பெருவிரல் வளைந்து இருந்தால், நீங்கள் அதிகம் உணர்ச்சிவசப்படுவீர்கள். புதிய சூழ்நிலைக்கு ஏற்ப உங்களை எளிதில் மாற்றிக் கொள்வீரகள். மற்றவர்கள் மீது விரைவில் அனுதாபம் காட்டுவீர்கள். இதனால் மற்றவர்கள் உங்கள் உணர்ச்சிகளை பயன்படுத்தி தங்கள் வேலைகளை எளிதில் நிறைவேற்றிக் கொள்வார்கள். வளைந்த பெருவிரலைக் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையை விட உறவுகளுக்கு அதிக முன்னுரிமை கொடுப்பீர்கள். சுய பாதுகாப்பு தொடர்பான உணர்ச்சி நுண்ணறிவை வளர்த்துக் கொள்ள அதிக நேரம் எடுக்கும். மேலும் இப்படியான பெருவிரலைக் கொண்டிருந்தால் இலக்குகளை அடைய வழக்கத்திற்கு மாறான பாதைகளை அடிக்கடி தேர்ந்தெடுப்பீர்கள். உங்களுக்கு கலை, நடிப்பு, நாடகம், சாகச விளையாட்டுகள் போன்ற தங்களின் திறமையை வெளிப்படுத்தும் தொழில்கள் மிகவும் பொருத்தமானவையாக இருக்கும். உங்களிடம் உள்ள ஒரு குறைபாடு என்றால், அது அதிகப்படியான நெகிழ்வுத்தன்மை மற்றும் சுய சந்தேகம் தான்.


No comments