Breaking News

கிறிஸ்துமஸ் சீசனில் வீட்டு சுவரில் சாக்ஸை தொங்க விடுவதன் காரணம் தெரியுமா?

 


மேற்கத்திய நாடுகள் மற்றும் ஹாலிவுட் படங்களின் கிறிஸ்துமஸ் கொண்டாட நிகழ்வுகளில் வீட்டு சுவரில் சாக்ஸ் தொங்கவிடுவதை பார்த்திருப்போம். அப்படி வீட்டு சுவர் மற்றும் கிறிஸ்துமஸ் மரத்தில் சாக்ஸ் தொங்கவிடுவதன் காரணத்தை இந்த பதிவில் தெரிந்து கொள்ளுங்கள். 

இயேசுவின் பிறந்த நாளான கிறிஸ்துமஸ் தினத்தை டிசம்பர் 25ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடுவதற்கு உலகமெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தயாராகி வருகின்றனர். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு கிறிஸ்தவர்கள் தங்கள் வீட்டில் கிறிஸ்துமஸ் மரம், கிறிஸ்துமஸ் குடியில், வண்ண விளக்குகள் வைப்பது பாரம்பரியமான வழக்கம். அத்துடன் வீட்டு சுவர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரத்தில் சாக்ஸ் தொங்கவிடுவதும் பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருகிறது. இப்படி சாக்ஸை தொங்கவிடும் முறையை மேற்கத்திய நாடுகளின் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் மற்றும் ஹாலிவுட் படங்களில் பார்த்திருப்போம். அப்படி வீட்டு சுவர்கள் மற்றும் கிறிஸ்துமஸ் மரத்தில் சாக்ஸை தொங்கவிடுவதன் பின்னால் உள்ள காரணம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.  

சாக்ஸ் தொங்க விடுவதன் காரணம்?

கிறிஸ்தவர்கள் சாக்ஸ் தொங்கவிடுவதன் பாரம்பரியம் 4ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த செயின்ட் நிக்கோலஸின் வாழ்க்கையிலிருந்து தோன்றியதாகக் கூறப்படுகிறது. மனைவியை இழந்த ஏழை தந்தை தனது மூன்று மகள்களுடன் ஒரு வீட்டில் வாழ்ந்து வந்துள்ளார். அவர் தனது மூன்று மகள்களின் திருமணத்திற்கு வரதட்சனை கொடுக்க முடியாத இக்கட்டான சூழலில் இருந்துள்ளார். மூன்று மகள்களின் தந்தையின் இக்கட்டான நிலையை அறிந்த செயின்ட் நிக்கோலஸ் அவருக்கு உதவ முடிவு செய்தார்.

தந்தை யார் எந்த தொண்டுகளை கொடுத்தாலும் ஏற்க மாட்டார் என்பதால் தந்தையின் வீட்டின் புகைபோக்கியில் மூன்று தங்கக் உருண்டைகளை செயின்ட் நிக்கோலஸ் ரகசியமாக எறிந்தார். எறியப்பட்ட தங்க உருண்டைகள் புகைபோக்கியின் நெருப்பில் காய்வதற்கு மேலே தொங்கவிடப்பட்டிருந்த மகள்களின் சாக்ஸில் வந்து விழுந்தது. மகளின் சாக்ஸில் தங்க உருண்டைகள் இருப்பதை கண்ட தந்தை, தனது மூன்று மகள்கள் இப்போது திருமணம் செய்து கொள்ள தகுதியுடையவர்கள் என்று மிகவும் மகிழிச்சியடைந்தார்.

 

No comments