Breaking News

நாளை கடைசி நாள்… 10, 11 & 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் கவனத்திற்கு…!

 


10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் தட்கல் திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்.

10-ம் வகுப்பு, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்க நேற்றுடன் கால அவகாசம் முடிந்தது, தட்கல் முறையில் விண்ணப்பிக்க டிசம்பர் 26 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. தேர்வர்கள் அரசுத் தேர்வு இயக்ககத்திற்கு நேரில் சென்று தேர்வுக் கட்டணத்துடன் கூடுதலாக 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.1000 மற்றும் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ரூ.500 செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

இடைநிலை, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாம் ஆண்டு பொது தேர்வுகளை மார்ச்-ஏப்., 2025 தேர்வு எழுத விண்ணப்பிக்க உள்ள தனி தேர்வர்கள் சேவை மையங்களில் விபரம் பெற்று கட்டண தொகை மற்றும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். இறுதி நாள் என்பதால் தேர்வு எழுத விரும்புவோர் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். கூடுதல் விபரங்களுக்கு www.dge.tn.gov.in என்ற இணைய தளத்தில் அறியலாம்.


No comments