ரூ.56 ஆயிரம் சம்பளம்.. 10 ம் வகுப்பு தகுதி போதும்.. அரசு வேலை உறுதி..!!
அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் தங்கி கல்வி பயின்ற முன்னாள் மாணவிகள் இளநிலை இல்லக்காப்பாளர் பணியிடத்திற்கு விண்ணப்பம் செய்தல் தொடர்பாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியின் இளநிலை இல்லக்காப்பாளர் பணியிடத்திற்கு ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையின்படி காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. ஊதிய நிலை 4 ல் குறைந்தபட்சம் ரூ.18000 அதிகபட்சம் ரூ.56,900 என்ற சம்பள விகிதத்தில் நேர்முக தேர்வின் அடிப்படையில் அரசு சேவை மேல்நிலைப்பள்ளியில் உள்ளுறை இல்லவாசிகளாக தங்கி கல்வி பயின்ற முன்னாள் மாணவிகளிடம் இருந்து 27.12.2024 மாலை 5.45-க்குள் நேரடியாகவோ அல்லது அஞ்சல் வழியாகவோ கீழ்காணும் முகவரியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதில், திருநெல்வேலி மாவட்டம் சேவை இல்ல மேல்நிலைப்பள்ளியில் உள்ளுறை இல்லவாசிகளாக தங்கி பயின்ற முன்னாள் மாணவிகள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். (பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்று நகல் மற்றும் மாற்றுச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்). வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து, வேலை வாய்ப்பு அட்டை நகல் இணைக்க வேண்டும்.வயது வரம்பு 25 முதல் 35 வயது வரை உள்ளவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
ஆதரவற்றவர்கள் மற்றும் விதவைகள் (அரசு சேவை இல்ல முன்னாள் மாணவிகள் மட்டும்) வயது வரம்பு 40. ஆதரவற்றவர்கள் மற்றும் விதவை / கணவனால் கைவிடப்பட்ட சான்று நகல் இணைக்க வேண்டும். குறைந்தது நான்கு வருடங்கள் திருநெல்வேலி மாவட்ட அரசு சேவை இல்ல பள்ளியில் தங்கி கல்வி பயின்று இருக்க வேண்டும். (9 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை ) அரசு சேவை இல்லத்திலிருந்து விடுவிக்கப்பட்ட நாள் மற்றும் வேலை வாய்ப்பு பதிவு செய்த நாள் ஆகியவற்றின் அடிப்படையில் முதுநிலை வரிசையின்படி தேர்வு செய்யப்படும்.
கண்காணிப்பாளர், அரசு சேவை இல்ல மேல்நிலைப்பள்ளி, சுப்பிரமணியபுரம் கீழத்
தெரு, பாளையங்கோட்டை திருநெல்வேலி - 627002என்ற முகவரியில் விண்ணப்பங்களை
சமர்ப்பிக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தி உள்ளது.
No comments