Breaking News

Personality Test: நீங்கள் யார் என்று சொல்லும் மோதிர விரலின் அளவு..! தெரிந்தால் ஆச்சரியப்படுவீங்க..!

 


ஆளுமை சோதனை: மோதிர விரல் ஒருவரின் ஆளுமை பற்றி சொல்லுவதாக கூறப்படுகிறது. விரல் வடிவங்கள் மற்றும் கோடுகளை வைத்து ஒருவரின் ஆளுமையை எவ்வாறு கண்டறிய முடியும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.

ஒவ்வொரு நபருக்கும் தனிதனி ஆளுமை மற்றும் சைகைகள் உள்ளன. ஒரு விஷயத்தின் மூலம் நாம் ஒரு நபரை பற்றிய அனைத்தையும் எளிதாக அறிந்து கொள்ள முடியும். இருப்பினும், உரையாடல் முறைகள் மட்டுமே ஒரு நபரின் அனைத்து ரகசியங்களையும் வெளிப்படுத்தாது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் ஒருவரின் உடல் உறுப்புகளின் வடிவத்தைப் பார்த்து நாம் ஆளுமையை எளிதாக அறிந்து கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.

ஒருவரின் கண்கள், மூக்கு, உதடுகள், காதுகள், கைகள் மற்றும் கால்கள் ஆகியவை அவரைப் பற்றி நிறைய கூறுகின்றன. உடல் உறுப்புகளின் அமைப்பு மூலம், ஒருவரின் ஆளுமையில் மறைந்திருக்கும் குணங்களை எளிதில் அடையாளம் காண முடியும். உடல் அமைப்பை நன்கு புரிந்துகொள்வதன் மூலம், ஒருவரை பற்றி நாம் எளிதாக அறிந்து கொள்ளலாம்.

ஆளுமை தேர்வு: மோதிர விரல் ஒருவரின் ஆளுமை பற்றி நிறைய கூறுவதாக சொல்லப்படுகிறது. மேலும், விரல் வடிவங்கள் மற்றும் கோடுகளை வைத்து ஒருவரின் ஆளுமையை எவ்வாறு கண்டறிய முடியும் என்பதை இங்கே தெரிந்து கொள்ளலாம்.class="lastpara">மோதிர விரலில் செங்குத்து கோடு: மோதிர விரலில் ஒரு செங்குத்து கோடு உள்ளது. இது விரலின் முதல் மூட்டு வரை செல்லும். அத்தகையவர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகளாக கருதப்படுகிறார்கள். அவர்கள் நல்ல வணிகர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் அனைத்து வகையான ஒப்பந்தத்திலும் நிபுணத்துவம் பெற்றவர்களாக இருப்பார்கள் என்று சொல்லப்படுகிறது. மேலும், அவர்கள் உணர்ச்சிகளை மதிப்பவர்களாக இருப்பார்களாம்.

மணிக்கட்டில் செங்குத்து நரம்புகள் தெரிபவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். அவர்கள் எங்கு சென்றாலும், சுற்றுப்புறத்தை மகிழ்ச்சியாக வைத்து கொள்பவர்களாக இருப்பார்கள். அனைத்து பணிகளையும் ஆர்வத்துடன் செய்து முடிப்பதில் வல்லவர்கள் என்று சொல்லப்படுகிறது.

உடல் எடையை குறைக்க உதவும் 10 குளிர்கால பழங்கள் மற்றும் உணவுகள்.!

சிலரின் மோதிர விரல் ஆள்காட்டி விரலை விட நீளமாக இருக்கும். அத்தகையவர்கள் அன்பும் ஆர்வமும் நிறைந்தவர்கள். அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்கிறார்கள் மற்றும் குடும்பத்தையும் துணையையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்கள் என்று கருதப்படுகிறது. அவர்கள் தங்கள் துணையை மகிழ்விக்க எதையும் செய்பவர்களாக இருப்பார்களாம்.

குறுகிய மோதிர விரல்: சிலருக்கு மோதிர விரல் குறுகியதாக இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இயல்பில் நல்லவர்களாக இருந்தாலும், பெரும்பாலும் கெட்ட சகவாசத்தில் விழுவார்கள் என்று சொல்லப்படுகிறது. சில நேரங்களில் யோசிக்காமல் செய்யும் செயல்களால் பல நேரங்களில் சிரமங்களை சந்திக்க நேரிடுகிறது.


No comments