Breaking News

No Exam.. லட்சத்தில் சம்பளம்.. இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கியில் வேலை..!! விண்ணப்பிக்க ரெடியா..?

 


இந்திய அஞ்சல் துறையின் கீழ் இயங்கும் இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் (IPPB) உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. 68 காலிப்பணியிடங்கள் நிரப்ப படுகிறது.

வயது வரம்பு :

* 01.12.2024 தேதியின்படி, உதவி மேலாளர் பதவிக்கு குறைந்தபட்சம் 20 வயது முதல் 30 வயது வரை இருக்க வேண்டும்.

* மேலாளர் பதவிக்கு 23 வயது முதல் 35 வயது வரை இருக்கலாம்.

* முதுநிலை மேலாளர் பதவிக்கு 26 வயது முதல் 35 வயது வரை இருக்கலாம்.

* சைபர் பாதுகாப்பு நிபுணர் அதிகபடியாக 50 வயது வரை இருக்கலாம்.

கல்வித்தகுதி : இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கி லிமிடெட் உள்ள இப்பணியிடங்கள் துறை சார்ந்த பிரிவில் B.E/B.Tech முடித்திருக்க வேண்டும் அல்லது முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். உதவி மேலாளர் பதவிக்கு 1 வருடம், மேலாளர் பதவிக்கு 3 வருடம் மற்றும் முதுநிலை மேலாளர் பதவிக்கு 6 வருடம் வரை பணி அனுபவம் தேவை

சம்பள விவரம் :

* உதவி மேலாளர் பணிக்கு தோராயமாக மாதம் ரூ.1,40,398 வழங்கப்படும்.

* மேலாளர் பதவிக்கு மாதம் ரூ.1,77,146 வழங்கப்படும்.

* முதுநிலை மேலாளர் பதவிக்கு ரூ.2,25,937 வழங்கப்படும்

எப்படி விண்ணப்பிப்பது..?

விண்ணப்பிக்க விரும்புகிறவர்கள் https://www.ippbonline.com/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.750 செலுத்த வேண்டும். எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.150 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

No comments