திடீரென தேர்வை ரத்து செய்த டிஎன்பிஎஸ்சி..!! அதிர்ச்சியில் தேர்வர்கள்..!! மறுதேர்வு எப்போது..?
இதுகுறித்து, டிஎன்பிஎஸ்சி தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “குற்ற வழக்கு தொடர்வு துறையில் உள்ள அரசு உதவி வழக்கு நடத்துநர், நிலை-II பதவியின் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை 13.09.2024 டிஎன்பிஎஸ்சியால் வெளியிடப்பட்டது.
இதற்கான கணினிவழித் தேர்வு டிசம்பர் 14ஆம் தேதி நடத்தப்பட்டது. சில தேர்வு மையங்களில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த தேர்வினை முழுமையாக முடிக்க இயலவில்லை. இதனைத் தொடர்ந்து தேர்வர்களிடம் இருந்து மறுதேர்வு நடத்த வேண்டுமென கோரிக்கை எழுந்தது. அதை முறையாக பரிசீலனை செய்து மேற்கண்ட பதவிக்காக டிசம்பர் 14ஆம் தேதி நடைபெற்ற கணினிவழித் தேர்வினை தேர்வாணையம் ரத்து செய்கிறது.
ஏற்கனவே இத்தேர்வுக்காக தேர்வாணையத்தால் அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு. மறுதேர்வு வரும் 22.02.2025 அன்று OMR முறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மறுதேர்வுக்கான நுழைவுச்சீட்டு, ஏற்கனவே அனுமதிக்கப்பட்ட தேர்வர்களுக்கு மட்டும். பின்னர், தனியே தேர்வாணைய இணையத்தளத்தில் வெளியிடப்படும்” என தெரிவித்துள்ளார்.
No comments