2 2 2 விதி தெரியுமா ? உடல்எடையைக் குறைக்க அட்டகாசமான திட்டம்
உடல்எடையைக் குறைக்க விரும்பினால் நீங்கள் கட்டாயமாக பதப்படுத்தப்பட்ட உணவுகளை சாப்பிடக் கூடாது, புரதம் அதிகம் சாப்பிட வேண்டும், கடினமான உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும். எனினும் எல்லா உடற்பயிற்சி விதிகளும் எடையைக் குறைக்க உதவாது. சில சமயங்களில் நேரம் விரயமாகலாம். உடல் எடையைக் குறைக்க முயற்சிகள் தேவை. சமூக வலைதளங்களில் மிகவும் பிரபலமான உடற்பயிற்சி விதி என்றால் 2-2-2 விதியை குறிப்பிடுகிறார்கள். அதிகளவு தண்ணீர் குடிப்பது, காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடுவது, நடைபயிற்சி செல்வது ஆகியவற்றை இந்த விதி வலியுறுத்துகிறது. கேட்பதற்கு மிகவும் எளிதாக உள்ளதா ? உடல் எடையைக் குறைக்க 2-2-2 விதி எவ்வாறு பயனளிக்கும் என்பதை பார்க்கலாம்.
எடையைக் குறைக்க 2-2-2 விதி
தினமும் இரண்டு பழம்
தினமும் இரண்டு பழம் சாப்பிட தொடங்கவும். ஆப்பிள், பெர்ரி, ஆரஞ்சு, பப்பாளி ஆகிய பழங்களை சாப்பிடலாம். வைட்டமின்ஸ், தாதுக்கள் நிறைந்த பழங்களை சாப்பிடுங்கள். அதிகளவு பழங்கள் சாப்பிடுவது எடையைக் குறைக்க உதவும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
தினமும் இரண்டு காய்கறி
குறைந்த கலோரி, அதிக நார்ச்சத்து கொண்ட இரண்டு காய்கறிகளை சாப்பிடவும். காய்கறிகள் உங்களை முழுமையாக உணர வைக்கும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளையும் வழங்கும். மதிய வேளையில் கீரை, கேரட், குடை மிளகாய், ப்ரோக்கோலி சாப்பிடுங்கள்.
இரண்டு லிட்டர் தண்ணீர்
உடலை எப்போதும் நீரேற்றமாக வைத்திருங்கள். ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கும் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். சாப்பிடும் 15 நிமிடங்களுக்கு முன்பாக இரண்டு டம்ளர் தண்ணீர் குடியுங்கள். இப்படி செய்தால் நீங்கள் அதிகம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். சர்க்கரை அதிகம் உள்ள பானங்களை தவிர்க்கவும்.
காலை, மாலை இரண்டு வேளை நடைபயிற்சி
காலை, மாலை நேரங்களில் நடைபயிற்சிக்கு சென்று சுறுசுறுப்பாக இருங்கள். நடைபயிற்சி கலோரிகளை எரிக்கவும், வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும்எத்தனை நாட்களுக்கு 2-2-2 பின்பற்றலாம் ?
இந்த விதி உணவுமுறையில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. அதற்காக நீங்கள் வேறு எதையும் சாப்பிட கூடாது என அர்த்தமல்ல. அதே நேரம் இதை முழு உணவுமுறையாக கருதக்கூடாது. உடல்நலத்திற்கு எந்த பாதிப்பும் ஏற்படாதவரை நீண்ட நாட்களுக்கு கூட விதியை பின்பற்றலாம்.
தீவிர உடல்நல பாதிப்பு, மருத்துவ சிகிச்சை செய்து கொண்ட நபர்கள் இந்த விதியை மருத்துவரின் ஆலோசனையை பெற்றே பின்பற்ற வேண்டும்.
2-2-2 விதி கடைபிடிக்கும் முறை
- வண்ண வண்ண நிறங்களில் காணப்படும் பழங்கள், காய்கறிகளை உணவுப் பழக்கத்தில் சேர்த்து கொள்ளுங்கள். உடலுக்கு அனைத்துவிதமான ஊட்டச்சத்துகளை பெறும் வகையில் காய்கறி, பழங்கள் சாப்பிடவும்.
- 2 லிட்டருக்கு குறைந்திடாமல் அதிகபட்சமாக 3 லிட்டர் வரை தண்ணீர் குடித்து உடலை நீரேற்றமாக வைத்திருக்கவும்.
- காலை, மாலை என 2 வேளையும் 30 நிமிடங்களுக்கு நடைபயிற்சி செல்லவும்.
No comments