குளிர்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடலாமா?? கட்டாயம் தெரிந்துக் கொள்ளுங்கள்…
பொதுவாக நாம் அதிகம் சாப்பிடும் பழங்களில் ஒன்று வாழைப்பழம் தான்.
வாழைப்பழத்தில் புரதம், மாவுச்சத்து, சுண்ணாம்பு, இரும்பு, பொட்டாசியம்,
அக்னிசியும் போன்ற பல எண்ணற்ற சத்துக்கள் உள்ளது. இதய ஆரோக்கியத்தை
மேம்படுத்தவும், இரத்த அழுத்தத்தை நிர்வகிக்கவும் வாழப்பழம் முக்கிய பங்கு
வகிக்கிறது. இதில் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ளதால், நல்ல சுறுசுறுப்பாக
இருக்க உதவும். இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்த வாழைப்பழம் உதவுகிறது.
மேலும்,
செரிமானத்தை மேம்படுத்த வாழைப்பழம் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால், உடல் எடையை குறைக்க வாழைப்பழம் உதவும்.
வாழைப்பழத்தில் இத்தனை நன்மைகள் இருந்தாலும், பலர் மழைகாலங்களில் வாழைப்பழம் சாப்பிடுவது இல்லை. இதற்க்கு முக்கிய காரணம், மழை நேரம் வாழைப்பழம் சாப்பிட்டால் சளி பிடிக்கும் என்ற நம்பிக்கை தான். ஆனால் அது முற்றிலும் தவறு. வாழைப்பழத்தை சாப்பிடுவதால் ஒருவருக்கு கட்டாயம் சளி பிடிக்காது என்று உணவு நிபுணர்கள் கூறுகின்றனர். வாழைப்பழம் சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடையாது. அதே சமயம் ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் வாழைப்பழம் சாப்பிடுவதை தவிர்க்கலாம். மேலும், வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிட கூடாது. ஏனென்றால், வெறும் வயிற்றில் வாழைப்பழம் சாப்பிடுவதால் செரிமானம் பிரச்சனைகள் ஏற்படும்.
மேலும், பொட்டாசியம் அதிகம் இருப்பதால், இதய நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் வெறும் வயிற்றில் கட்டாயம் சாப்பிடக்கூடாது. பொதுவாகவே பால் சளியை அதிகப்படுத்தும் என்பதால், வாழைப்பழத்தை பால் அல்லது பால் சார்ந்த பொருட்களுடன் சேர்த்து சாப்பிடக்கூடாது. மழைக்காலத்தில் நீங்கள் வாழைப்பழம் சாப்பிட விரும்பினால், காலை உணவிற்கும் மதிய உணவிற்கும் இடையே சாப்பிடலாம். அல்லது மாலை 4 மணியளவில் சாப்பிடலாம். இரவில் வாழைப்பழம் சாப்பிட வேண்டும் என்றால், உணவுக்கு பின் ஒன்றரை மணி நேரம் கழித்து தான் சாப்பிட வேண்டும்.
No comments