Breaking News

ரயில்வே துறையில் 10ம் வகுப்பு முடித்தவர்களுக்கான வேலை – 32,000 காலிப்பணியிடங்கள் || விண்ணப்பிக்க தவறாதீர்கள்!

 
Railway Recruitment Board எனப்படும் RRB ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் Level 1(Group D) பணிக்கென காலியாக உள்ள 32,000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

RRC காலிப்பணியிடங்கள்:

Level 1(Group D) பணிக்கென காலியாக உள்ள 32,000 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Group ‘D’  

 கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

RRC வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18 என்றும் அதிகபட்ச வயதானது 36 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Group ‘D’ ஊதிய விவரம்:

இப்பணிக்கென தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.18,000/- ஊதியம் வழங்கப்படும்.

RRC தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 22.02.2025ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

No comments