Breaking News

உடலில் இந்த பிரச்சனைகளை அடிக்கடி சந்திச்சா.. உங்க சிறுநீரகம் படுமோசமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்...

 

சிறுநீரகங்கள் நமது உடலில் மிகவும் முக்கியமான வேலையை செய்து வருகின்றன. அதுவும் சிறுநீரகங்கள் உடலில் இருந்து கழிவுகள் மற்றும் கூடுதல் திரவத்தை அகற்றும். மேலும் இது உடலின் உயிரணுக்களால் உற்பத்தி செய்யப்படும் அமிலத்தை அகற்றி, உங்கள் இரத்தத்தில் சோடியம், கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் போன்ற நீர், உப்புகள் மற்றும் தாதுக்களின் ஆரோக்கியமான சமநிலையை பராமரிக்கின்றன.
உடலை சுத்தப்படுத்தும் பணியை செய்வதால் சிறுநீரகங்களில் சேதங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளன. சிறுநீரக சேதங்களை தான் நெஃப்ரோபதி என்று அழைப்பர். இது இரு சிறுநீரகங்களையும் பாதிக்கும் ஒரு தீவிரமான சுகாதார நிலை.

இந்நிலையில் சிறுநீரகங்களில் அழற்சி ஏற்பட்டிருக்கலாம் அல்லது ஏற்படாமலும் இருக்கலாம். ஒருவரது சிறுநீரகங்களில் பிரச்சனை அல்லது சேதம் ஏற்பட்டிருந்தால், அது ஒருசில அறிகுறிகளை வெளிக்காட்டும். அந்த அறிகுறிகளை சந்தித்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். உடல் சோர்வு உங்கள் உடல் மிகவும் பலவீனமாக இருப்பதை உணர்கிறீர்களா? தினசரி செயல்பாடுகளைக் கூட செய்ய முடியாத அளவில் உடல் சோர்வை சந்திக்கிறீர்களா? அப்ப சில நாட்களாக உடலில் மிகுந்த சோர்வை நீங்கள் உணர்ந்தால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது.
 
ஏனெனில் அது சிறுநீரகங்களில் உள்ள கடுமையான சேதத்தின் அறிகுறியாக இருக்கலாம். சிறுநீர் கழிக்கும் முறையில் மாற்றம் ஒருவரது சிறுநீரைக் கொண்டு உடலில் உள்ள பல்வேறு பிரச்சனைகளை அறியலாம். அதுவும் ஒருவர் வழக்கமாக சிறுநீர் கழிக்கும் எண்ணிக்கையை விட அதிகமாக சிறுநீர் கழிக்க நேரிட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்போது உடனே மருத்துவரை அணுகி, அவரிடம் இதைத் தெரிவிக்க வேண்டும்.
 
கணுக்கால், கால்கள் மற்றும் கைகளில் வீக்கம் ஒருவரது சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருந்தால், அது உடலில் உள்ள அதிகப்படியான நீர் மற்றும் உப்பை வெளியேற்றும். ஒருவேளை சிறுநீரகங்களால் சரியாக செயல்பட முடியாமல் போகும் போது, அதன் விளைவாக அந்த அதிகப்படியான நீரும், உப்பும் உடலிலேயே தேங்கி, அது வீக்கத்திற்கு வழிவகுக்கும். குறிப்பாக இந்த வீக்கம் கணுக்கால், கால்கள் மற்றும் கைகளில் காணப்படும். மூச்சுத்திணறல் சிறுநீரக பிரச்சனைகளுக்கும், மூச்சு திணறலுக்கும் என்ன சம்பந்தம் இருக்கப் போகிறது என்று பலரும் நினைப்பதுண்டு. 
 
ஆனால் ஒருவரது சிறுநீரகங்கள் சரியாக செயல்படாமல் இருந்தால், அதன் விளைவாக உடலில் திரவங்கள் தேங்க ஆரம்பிக்கும் மற்றும் சுவாசிப்பதில் சிரமத்தை ஏற்படுத்தி மூச்சுத்திணறலை ஏற்படுத்தும். எனவே திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டால், அதை சாதாரணமாக எடுத்துக் கொள்ளாதீர்கள்.
 
உயர் இரத்த அழுத்தம் உயர் இரத்த அழுத்தம் எப்போதுமே ஆபத்தானது. இதை ஒருபோதும் புறக்கணிக்கக்கூடாது. ஏனெனில் இது இதய நோய் முதல் சிறுநீரக சேதம் வரை பல பிரச்சனைகளைத் தூண்டும். அதுவும் சிறுநீரகங்களும், உயர் இரத்த அழுத்தம் ஒன்றோடொன்று தொடர்புடையவை. எப்படியெனில் சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்கும் போது, உடலில் சோடியத்தின் அளவு சமநிலையில் பராமரிக்கப்பட்டு, இரத்த நாளங்களின் பதற்றத்தைக் கட்டுப்படுத்தும் ஹார்மோன்களை வெளியிட்டு இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தும். 
 
அதுவே சிறுநீரகங்கள் சேதமடைந்திருந்தால், இரத்த அழுத்தம் கட்டுப்படுத்த முடியாத அளவில் அதிகரிக்கும். எனவே கவனமாக இருங்கள். உங்க ராசி என்னனு சொல்லுங்க..2025-ல் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கும்னு சொல்றோம்..5 ராசிகளுக்கு ஆபத்து இருக்கு!"உங்க ராசி என்னனு சொல்லுங்க..2025-ல் உங்க ஆரோக்கியம் எப்படி இருக்கும்னு சொல்றோம்..5 ராசிகளுக்கு ஆபத்து இருக்கு!" வாந்தி அல்லது குமட்டல் சிறுநீரகங்களில் ஏதேனும் பிரச்சனை இருந்தாலோ அல்லது கடுமையாக சேதமடைந்திருந்தாலோ, இரத்த ஓட்டத்தில் நச்சுக்கள் அசாதாரண அளவில் தேங்கி, குமட்டல் மற்றும் வாந்தி போன்றவற்றை உண்டாக்கும். 
 
எனவே தேவையில்லாமல் திடீரென்று வாந்திலோ, குமட்டலோ அதிகமாக ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுகுங்கள். சரும பிரச்சனைகள் சிறுநீரகங்கள் இரத்தத்தில் இருந்து நச்சுக்களை திறம்பட அகற்றாமல் இருந்தால், இரத்தத்தில் நச்சுக்கள் குவிந்து கடுமையான அரிப்புக்களை உண்டாக்கும். அதுவும் சிறுநீரகங்களில் சேதம் ஏற்பட்டிருந்தால், கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்களின் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டு, சரும வறட்சி, செதில் செதில்களாக தோல் உரிவது அல்லது அரிப்புக்களை ஏற்படுத்தும். எனவே மேலே கொடுக்கப்பட்டுள்ள பிரச்சனைகளை ஒருவர் நீண்ட காலமாக சந்தித்து வந்தால், தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, உடனே சிகிச்சைகளை மேற்கொண்டால், சிறுநீரக சேதம் தீவிரமடைவதைத் தடுக்கலாம்.





No comments