ரூ. 35 ஆயிரம் சம்பளம்... மாவட்ட வள பயிற்றுநர் காலிப்பணியிடம் அறிவிப்பு.. விண்ணப்பிக்கும் முறை இதோ
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை, மகளிர் திட்டம், வாழ்வாதார மேம்பாடு பண்ணை சார் தொழில்கள் முற்றிலும் தற்காலிக காலியிடமாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
தென்காசி மாவட்டம் தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க மேலாண்மை, மகளிர் திட்டம், வாழ்வாதார மேம்பாடு பண்ணை சார் தொழில்கள் முற்றிலும் தற்காலிக காலியிடமாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
கல்வித் தகுதி: A bachelor degree in Agriculture/Veterinary Science/Horticulture for farm livelihood DRPS Holding a master degree in Business Administration in supply chain management ஆகிய கல்வித் தகுதியுடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
அனுபவம்: குறைந்தது இரண்டு ஆண்டுகளிலிருந்து அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் அவசியம்.
முதன்மைப் பணி கிராமப்புறங்களில் இருப்பதால், பதவியில் இருப்பவர் தமிழில் நல்ல வாய்மொழி மற்றும் எழுத்துத் தொடர்பு திறன் பெற்றிருக்க வேண்டும். GOI வழங்கும் திட்டங்களின் அதிகாரப்பூர்வ தகவல் ஆங்கிலத்தில் இருப்பதால் ஆங்கிலம் மொழி தெரிந்திருக்க வேண்டியதும் அவசியம். கணினி பற்றி போதுமான அறிவு இருக்க வேண்டும். தென்காசி மாவட்டத்தில் காலியாக உள்ள மாவட்ட வள பயிற்றுநர் (பண்ணை சார்) பணி இடத்தினை நிரப்பிடும் பொருட்டு அனைத்து ஊராட்சிகளிலிருந்தும் தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
சம்பளம்: தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ரூ 20,000 – 35,000 வரை ஊதியம் வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்ப கட்டணம் இல்லை.
தேர்வு செய்யும் முறை: இப்பணிக்கு நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: விண்ணப்பிக்க உங்களது BIO-DATA எவ்வித தவறும் இல்லாமல் பூர்த்தி செய்து, அச்சிட்டு பின் வரும் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
**விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:**Project Director, TamilNadu State Rural Livelihood Mission, District Mission Management Unit, Tenkasi Collectorate Campus, Rail Nagar, Tenkasi – 627 811.
**விண்ணப்பிக்க கடைசி நாள்:**21.12.2024 ஆம் தேதி 05.45 மணிக்குள் மாவட்ட இயக்க மேலாண்மை விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும்
No comments