Breaking News

ஆசிரியர் மற்றும் மாணவர்களின் வருகை பதிவை எளிதாக மேற்கொள்ளல் மற்றும் கண்காணித்தல் வழிமுறைகள் :

 


📍 TN_ EMIS  APP- ல் மாணவர்கள்  மற்றும் ஆசிரியர்களின் வருகையை பதிவு செய்வது கட்டாயமாகும்
என்பதை அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள் நன்கு அறிவர் .

📍பதிவுகளை Offline- லும்  செய்ய இயலும் . Network  செழுமையான இடங்களில் பதிவுகள் உடனடியாக server  சென்றடைகிறது. அதற்கான Acknowledgement- தான் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட வகுப்புகள் பச்சை நிறத்தில் மாறுவது. அவ்வாறு பச்சை நிறம் வராமல், மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திற்கு மாறிவிட்டால் , நம் பதிவுகள் மேற்கொள்ளப்பட்டுவிட்டன, ஆனால் server -ஐ சென்றடையவில்லை என்று அர்த்தமாகும். server- ஐ சென்றடைவதில்  உள்ள இடர்பாடுகளில் ஒன்று பள்ளி அமைவிடத்தில் எந்த ஒரு Network  வலுவுடன் இல்லாமல் இருப்பது.

📍மேலும் கைபேசியில் உள்ள ஏற்கனவே பதிவிறக்கம் செய்யப்பட்ட பழைய கோப்புகள், புகைப்படங்கள் ஆகியவை பதிவுகளை உடனடியாக வெளிச்செல்ல முடியாதபடி தடுத்தல். இந்த சிக்கல் கைபேசியின் இயக்க நினைவாற்றலை (RANDOM  ACCESS  MEMORY) பொறுத்தது.

📍 பதிவுகள் server-ஐ சென்றடைந்தாலும், அறிக்கை பகுதிக்கு (REPORT  MODULE ) ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறைதான் பதிவுகள் சென்றடைவதால்', ஒரு மணி நேர இடைவெளியில் server-ஐ சென்றடைந்த  பதிவுகள், அடுத்த ஒரு மணி நேரம் வரை அறிக்கையில் இடம்பெறுவதில்லை. இது பள்ளிகளிடையே     நிறைவின்மையை ஏற்படுத்துகிறது.

📍01.12.2021 அன்று நடைபெற்ற மதிப்புமிகு ஆணையர் அவர்களின் கூட்டத்திலும் , நேற்று 13.12.2021 நடைபெற்ற  மரியாதைக்குரிய மாநில திட்ட இயக்குநர் அவர்களின்  ஆய்வு கூட்டத்திலும்  வருகை பதிவை ஒவ்வொரு நாளும் நூறு சதவிகிதம் உறுதி செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 கூட்டத்தில் வழங்கப்பட்ட அறிவுரைகள் :

🎯அந்நாளைய பதிவுகள் மறுநாள் மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படவேண்டும்.

🎯எனவே server-க்கு பதிவுகள் சென்றடைவதில்  ஏற்படும் காலதாமத்தை கருத்தில் கொண்டு பள்ளிகள் மாலைக்குள் SYNC செய்துகொள்ளவேண்டும்.

🎯 மாலை வரை SYNC  செய்ய அனுமதிக்கப்படுவதால் ,பதிவை மாலையில் மேற்கொள்ள வேண்டும் என்று அர்த்தமில்லை.

🎯 காலையில் வகுப்புகள் துவங்கும்போதே பதிவுகளை ONLINE/OFFLINE இல் முடித்துவிடவேண்டும் .

🎯 எனவே பதிவேற்றம் செய்யும்போதே பதிவு செய்யும் நேரமும்(PUNCHING  TIME ) பதிவாகும் என்பது முக்கிமானது.

🎯தகவல் எந்த நேரத்தில் server-ஐ சென்றடைந்தாலும் PUNCHING TIME மாறாது.

 🎯தொழில்நுட்ப காரணங்களால் தகவல் server-ஐ அடைவதில்  ஏற்படும் காலதாமதம் புரிந்துகொள்ளப்படும்.   


🎯ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு பெறப்படும் அறிக்கை மறுநாள் சார்ந்த அலுவலர்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்படும்.

🎯எனவே அனைத்து பள்ளிகளும் NETWORK ISSUE வை காரணம் காட்டாமல் அன்றய சரியான பதிவுகளை  கொண்டு 100% ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை பதிவினை மேற்கொள்ள கேட்டுக்கொள்ளப்படுகிறது.

No comments