உங்கள் செல்ல குழந்தைகளுக்கு ஒரு அருமையான கதை- குட்டிக் கதை மகிழ்ச்சி எங்கே?
ஒரு ஊர்ல ஒரு காக்கா
இருந்துச்சாம் .
அது ரொம்ப
மகிழ்ச்சியா இருந்துச்சு,
ஒரு கொக்கை பார்க்கும்
வரை.
அது கொக்கை பார்த்து
சொல்லிச்சாம்.
நீ வெள்ளையா எவ்வளவு அழகா இருக்கே .. கருப்பா இருக்கும் என்னை எனக்கே
பிடிக்கலை
கொக்கு சொன்னது.
நானும் அப்படிதான் நினைத்தேன் , கிளியைப் பார்க்கும் வரை... அது இரண்டு நிறங்களில்
எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா ?
காகமும் கிளியிடம்
சென்று, கொக்கு சொன்னதைக் கேட்டவுடன் கிளி
சொன்னது.
உண்மை தான்...நான் மகிழ்ச்சியாகத் தான் இருந்தேன் , ஒரு மயிலைப் பார்க்கும் வரை.... அது பல நிறங்களில்
எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா?
உடனே காகமும் மயில்
இருக்கும் ஒரு மிருகக்
காட்சி சாலை சென்று
மயிலைப் பார்க்க , அங்கு
ஆயிரக்கணக்கான
ஜனங்கள் மயிலைப் பார்க்க
காத்திருக்க , காகம்
நினைத்தது
..ம்ம்ம்.இதுதான் மகிழ்ச்சி
என்று.
அழகு மயிலே.., உன்னைக்
காண எவ்வளவு பேர்???....
என்னைப் பார்த்தாலே
இவர்கள் முகத்தைத்
திருப்பிக் கொள்கிறார்கள்.
என்னைப்
பொறுத்தவரை
உலகிலேயே நீதான்
அதிக மகிழ்ச்சியானவர்
என்றது.
மயில் சொன்னது.
அன்பு காகமே, நான் எப்பவும் நினைத்துக்
கொண்டிருந்தேன்... நான் தான் அழகு....மேலும் மகிழ்ச்சியான பறவை என்று...
ஆனால் எனது இந்த அழகு தான் என்னை ஒரு
சிறையில் பூட்டி
வைத்திருக்க செய்கிறது.
இந்த மிருகக் காட்சி சாலை
முழுதும் நான் பார்த்ததில் ,
காகம் மட்டுமே பூட்டி
வைக்கப்படவில்லை ....
எனவே நான் யோசித்தேன் ,
நானும் காகமாக இருந்தால், உலகம் முழுதும் ஜாலியாக சுற்றி வரலாமே
நண்பர்களே , இதுதான்
நமது பிரச்சினையும் .
நாம் தேவை இல்லாமல்
நம்மை மற்றவர்களுடன்
ஒப்பிட்டு, பொறாமை கொண்டு, நமக்கு நாமே
கவலை கொள்கிறோம்.
நமக்கு இருப்பதை வைத்து
மகிழ்ச்சி கொள்வதும்
இல்லை.
ஒப்பீடுகளால் யாதொரு
பயனும் இல்லை.
உன்னை முதலில் நேசிக்க
கற்றுக்கொள்.
உன்னை விட வேறு யாரும் உன்னை அதிகம்
நேசிக்க முடியாது.
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
இன்றைய சிந்தனைக்கு
அதிகாரம் : 17 - அழுக்காறாமை
குறள்:162
விழுப்பேற்றின் அஃதொப்பது இல்லையார் மாட்டும்
அழுக்காற்றின் அன்மை பெறின்
கலைஞர் உரை:
யாரிடமும் பொறாமை கொள்ளாத பண்பு ஒருவர்க்கு வாய்க்கப் பெறுமேயானால் அதற்கு மேலான பேறு அவருக்கு வேறு எதுவுமில்லை.
மு.வ. உரை :
யாரிடத்திலும் பொறாமை இல்லாதிருக்கப் பெற்றால், ஒருவன் பெறத்தக்க மேம்பாடான பேறுகளில் அதற்கு ஒப்பானது வேறொன்றும் இல்லை.
சாலமன் பாப்பையா உரை :
எவர் இடத்தும் பொறாமை கொள்ளாதிருப்பதை ஒருவன் பெற்றால் சீரிய சிறப்புகளுள் அது போன்றது வேறு இல்லை.
Translation:
If man can learn to envy none on earth,\r\n'Tis richest gift, -beyond compare its worth.
Explanation:
Amongst all attainable excellences there is none equal to that of being free from envy towords others.
இனிய காலை வணக்கம்
No comments