இந்த மாதம் வருமானம் வரி பிடித்தம் செய்யும் அனைத்து அலுவலர்களுக்கும் இந்த பதிவு மிகவும் முக்கியமானதாகும். பத்து லட்சத்திற்கு அதிகமாக சம்பளம் பெறுபவர்களுக்கு புதிய வருமான வரிமுறையும் 10 லட்சத்திற்கு குறைவாக சம்பளம் பெறுபவர்களுக்கு பழைய வருமான வரியும் உகந்ததாக இருக்கும். முழு விவரங்கள் இந்த பதிவில்.
INCOME TAX 2024-2025
வருமான வரி பிடித்தம்
பிரதி மாதம் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை IFHRMS மூலம் PAY SLIP DOWNLOAD செய்து
வருமான
வரி கணக்கீட்டு படிவத்தில் பூர்த்தி செய்து வருமான வரி தொகையை அறிந்து
மீதமுள்ள மாதத்திற்கு எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை முடிவு
செய்திட வேண்டுகிறோம்
தேவைப்பட்டால்,
டிசம்பர் மாத ஊதியப் பட்டியலில் மாற்றம் செய்து அதற்கான COVERING LETTER ம் வைத்து அலுவலகத்திற்கு அனுப்பிடலாம்
வருமான வரித் தொகை பிடித்தம் போதுமானதாக இருந்தால் மாற்றம் தேவையில்லை....
ரூ.10,00,000 லட்சத்திற்குள் ஊதியம் பெறுபவர்களுக்கு பழைய முறையும்
10,00,000 லட்சத்திற்கு மேல் ஊதியம் பெறுபவர்களுக்கு புதிய வருமான வரி முறையும் பயனுள்ளதாக இருக்கும்
புதிய வரி முறையில்
ரூ.75,000 ரூ நிரந்தரக் கழிவு
(சென்ற வருடம் ரூ.50,000 ஆக இருந்தது)
முதல் 3,00,000 NIL
3,00,000 - 7,00,000 --- 5%
(சென்ற ஆண்டில் 6 லட்சம் வரை இருந்தது தற்போது 1 லட்சம் கூடுதலாக்கப்பட்டுள்ளது)
7,00,000 - 10,00,000 ----- 10%
10,00,000 - 12,00,000 ----15%
12,00,000 - 15,00,000 ----20%
15 லட்சத்திற்கு மேல் -30%
இனி வரும் மாதங்களில் வருமான வரி பிடித்தத்தை சரி செய்து கூடுதலாக பிடித்தம் செய்வதை தவிர்த்திட வேண்டுகிறோம்...
டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி 3 மாதங்களில் எவ்வளவு பிடித்தம் செய்ய வேண்டும் என்பதை நாம் கணக்கீடு செய்தால் மட்டுமே உறுதி செய்யலாம்
கவனத்திற்காக,
IFHRMS ல் தானாகவே கணக்கீடு செய்வதால் நமது வருமான வரி தொகை முடிவடைந்தவுடன் பிடித்தத்தை நிறுத்திடவும் வாய்ப்பு உண்டு
இருப்பினும்
நாம்
முன் எச்சரிக்கையாக இருப்பது பின்னர் கூடுதலாக பிடித்தம் செய்த தொகையை
REFUND வாங்கிட தேவை இருக்காது என்பதனை தெரிவித்துக் கொள்கிறோம்....
No comments