10 நாட்களுக்கு ஒரு இன்சூரன்ஸ் பிரீமியம்.. பாலிசி தொகை குடும்பத்திற்கே ரூ.9 மட்டுமே.. ரூ.25000 வரை கிடைக்கும்..!
பாலிசித்தொகை ஒரு குடும்பத்திற்காக வெறும் 9 ரூபாய் செலுத்தினால், ரூ. 25,000 வரை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்பதுடன், இந்த பாலிசி வெறும் பத்து நாட்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்த சிறப்பு பாலிசியை போன்பே நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இந்த பாலிசிக்கு ‘போன்பே கிராக்கர்ஸ் இன்சூரன்ஸ்’ திட்டம் என்று பெயரிடப்பட்டுள்ளது.
தீபாவளி நேரத்தில் பட்டாசு வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் காயம் ஏற்படும்போது இந்த இன்சூரன்ஸ் பாலிசி உதவியாக இருக்கும். தீபாவளி நேரத்தில் பட்டாசுகள் பயன்படுத்தும் போது மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. எதிர்பாராத விதமாக வெடிவிபத்து ஏற்பட்டால், இந்த காப்பீட்டுத் தொகையால் ரூ. 25,000 வரை கிளைம் செய்ய முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் அடங்கிய ஒரு குடும்பத்திற்காக இந்த திட்டத்தில் வெறும் 9 ரூபாய் மட்டுமே செலுத்த வேண்டும் என்றும், அதில் ஜிஎஸ்டியும் அடங்கும் என்றும் குறிப்பிடத்தக்கது. அக்டோபர் 25 முதல் இந்த காப்பீட்டுப் பாலிசியை பெற்றுக் கொள்ளலாம் என்றும், பாலிசியை எடுத்த 10 நாட்களுக்கு உள்ளாக கிளைம் செய்ய முடியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
தீபாவளி சமயங்களில் பட்டாசுகளால் ஏற்படும் விபத்துக்களுக்கு நம்முடைய குடும்பத்தினர் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த பாலிசியை எடுத்துப் பயன் பெறலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments