Breaking: தமிழகத்தில் 21 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட். வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை.!!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்துள்ள நிலையில் வங்க கடலில் உருவான புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலு பெற்றுள்ளது.
இது நாளை டானாக புயலாக மாறி நாளை மறுநாள் அதிதீவிர புயலாக வலுப்பெற்று ஒடிசா அருகே கரையை கடக்க உள்ளது. இதனால் தமிழகத்திற்கு பெரிய அளவில் பாதிப்பு இல்லை என்றாலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு அதாவது இரவு 7 மணி வரையில் 21 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் இன்று காலை முதல் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சில மாவட்டங்களில் கன மழை பெய்தால் பள்ளிகளுக்கு கூட விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன் பிறகு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்து வருகிறது. மேலும் அந்த வகையில் தற்போது காஞ்சிபுரம், வேலூர், தர்மபுரி, சேலம், நாமக்கல், கரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனி மற்றும் கோயம்புத்தூர் உள்ளிட்ட 21 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்தும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
No comments