TNPSC: தொடரும் அதிரடிகள்; டிஎன்பிஎஸ்சி தேர்வு முடிவுகள் இவ்வளவு சீக்கிரமா?- வெளியான அறிவிப்பு
டிஎன்பிஎஸ்சி தலைவராக பிரபாகர் ஐஏஎஸ் பொறுப்பேற்ற நிலையில், அதன் வேகம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. இந்த நிலையில், 2024ஆம் ஆண்டு நடத்தப்பட்ட முதன்மைத் தேர்வு முடிவுகள் வெகு விரைவில் வெளியிடப்பட்டு வருவதாக டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.
2022 மற்றும் 2023ஆம் ஆண்டுகளை ஒப்பிடும்போது இந்த வேகம் அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து டிஎன்பிஎஸ்சி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், தேர்வு முடிவுகள் வெளியாக எடுத்துக் கொள்ளப்பட்ட நாட்கள், தேர்வு வாரியாக பட்டியலிட்டுக் காட்டப்பட்டுள்ளன.
வெகு விரைவில் வெளியான முதன்மைத் தேர்வு முடிவுகள்
இதன்படி, 2024ஆம் ஆண்டில் இதுவரை 6 போட்டித் தேர்வுகளுக்கான முதன்மைத் தேர்வுகள் நடத்தப்பட்டு, தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு உள்ளன. குறிப்பாக நிர்வாக அலுவலர், ஒருங்கிணைந்த கணக்கியல் சேவைகளுக்கான தேர்வு, குரூப் 1, குரூப் 1 பி, 1 சி ஆகிய படிப்புகளுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. இந்தத் தேதிகளை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
இதற்குக் குறைந்தபட்சம் 27 வேலை நாட்களில் இருந்து அதிகபட்சமாக 49 வேலை நாட்கள் மட்டுமே ஆகியுள்ளன. இது கடந்த 2022 மற்றும் 2023ஆம் ஆண்டைக் காட்டிலும் மிகவும் குறைவு என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.
No comments