Breaking News

பாஸ்போர்ட் இல்லாம உள்ள கூட போக முடியாது! இந்தியாவில் இப்படி ஒரு ரயில் நிலையமா?

 


பாஸ்போர்ட் மற்றும் விசா இருந்தால் மட்டுமே இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்குள் செல்ல முடியும், அது எந்த ரயில் நிலையம் என்பதை பார்க்கலாம்.

பொதுவாக ரயில் நிலையம் செல்ல பிளாட்பார்ம் டிக்கெட் இருந்தால் போதும், ஒருவேளை ரயில் ஏற டிக்கெட் எடுத்திருந்தால் அந்த பிளாட்பார்ம் டிக்கெட்டும் தேவையில்லை. ஆனால் இந்தியாவில் உள்ள ஒரு ரயில் நிலையத்திற்குள் செல்ல பாஸ்போர்ட் மற்றும் விசா கட்டாயம் தேவை. பொதுவாக விமானத்தில் வெளிநாடுகளுக்கு சென்றால் தான் பாஸ்போர்ட், விசா தேவைப்படும், ஆனால் ஒரு ரயில் நிலையத்திற்குள் நுழையவே பாஸ்போர்ட் தேவைப்படுகிறது. அப்படி அதில் என்ன ஸ்பெஷல் என்பதை பார்க்கலாம்.

அந்த ரயில் நிலையம் வேறெங்கும் இல்லை... பஞ்சாப் மாநிலத்தில் தான் அமைந்துள்ளது. அட்டாரி என பெயரிடப்பட்டுள்ள அந்த ரயில் நிலையத்திற்குள் நுழைய தான் பாஸ்போர்ட் கட்டாயம் தேவை. ஏனெனில் இந்த ரயில் நிலையம் இந்தியா - பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. சொல்லப்போனால் இந்தியா - பாகிஸ்தாஸ் ரயில் வழித்தடத்தில் இந்தியாவின் கடைசி ரயில் நிலையம் இந்த அட்டாரி ரயில் நிலையம் தான்.


அட்டாரி ரயில் நிலையம் முழுக்க முழுக்க ராணுவ பாதுகாப்பு நிரம்பி இருக்கும். இங்கு வரும் பயணிகள் பாஸ்போர்ட் மற்றும் விசா வைத்திருக்கிறார்களா என்பதை உறுதி செய்த பின்னரே அவர்கள் உள்ளே அனுப்பப்படுவார்களாம். ஆனால் கடந்த 2019-ம் ஆண்டு முதல் பாகிஸ்தானுக்கு இங்கிருந்து ரயில்கள் இயக்கப்படுவது இல்லை. அதற்கு முன்னர் வரை தினசரி அட்டாரி ரயில் நிலையத்தில் இருந்து பாகிஸ்தானின் லாகூருக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன.

தற்போது அட்டாரி ரயில்நிலையத்தில் மொத்தமே நான்கு ரயில்கள் தான் இயங்குகின்றன. அதில் ஒன்று சம்ஜவுதா எக்ஸ்பிரஸ், இது டெல்லியில் இருந்து அட்டாரி வரை வாரத்திற்கு இரு தினங்கள் மட்டுமே இயக்கப்படுகிறது. இதுதவிர அமிர்தசரஸில் இருந்து இரு பேசஞ்சர் ரயில்களும், ஜபல்பூரில் இருந்து ஒரு ஸ்பெஷல் ரயிலும் அட்டாரிக்கு இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் நிலையத்தில் மொத்தம் 3 பிளாட்பாரங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

No comments