பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.10.24
கல்வியே நாட்டின் முதல் அரண்.
Education is the chief defence of a Nation.
இரண்டொழுக்க பண்புகள் :
1.விலை கொடுத்து வாங்கும் பொருளை பொறுப்புடன் கையாளுங்கள்.
2. அவசியம் தேவை என்றால் மட்டுமே விலை கொடுத்து வாங்குங்கள் .
பொன்மொழி :
ஒரு போதும் துன்பமாக மாறாத பொருள் ஒன்று உண்டென்றால், அது நாம் செய்யும் நற்செயலே.---மேட்டர்லிங்க்
பொது அறிவு :
1. ஆண்டு முழுவதும் சூரிய ஒளிக்கதிர்கள் செங்குத்தாக விழும் பகுதி எது?
விடை: பூமத்திய ரேகை மண்டலம்
2. அறுவைச் சிகிச்சையில் உடலின் உள்ளே உள்ள பாகங்களைத் தைப்பதற்குப் பயன்படுவது எது?
விடை: பட்டு நாண்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
செயற்கை அல்லது வேதியல் உரங்கள் உபயோகித்து செய்யப் படும் விவசாயம் அதிக மகசூல் தந்தாலும் இது அதிக அளவில் மண்ணையும் மனிதனையும் பாதிக்க ஆரம்பித்தது. இதன் விளைவாக இயற்கை உரம் கொண்டு செய்யப் படும் இயற்கை விவசாயத்திற்கு மாற வேண்டும் என்ற குரல் எங்கும் ஒலிக்க ஆரம்பித்தது
அக்டோபர் 22
நீதிக்கதை
பருவத்தே பயிர்செய்
பழனிக்கு சொந்தமாக வயல் ஒன்று இருந்தது. மற்றவர்கள் எல்லாம் வயலில் உழுகின்ற நேரம் பழனி தன் வயலைப் பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் சும்மாவேயிருந்தான்.
இதனைக் கவனித்த பழனியின் மனைவி வயலில் ஏர்கலப்பை பூட்டி உழும்படி கூறினாள். பழனி அதனை ஒரு காதில் வாங்கி மறுகாதில் விட்டு விட்டான்.
மற்ற விவசாயிகள் எல்லாம் வயலில் நீர் பாய்ச்சி விவசாய வேலையை ஆரம்பித்தார்கள். அதனைக் கண்ட பழனி நமது வயலில் பின்னர் விவசாயம் செய்து கொள்ளலாம் என்று சும்மாவே இருந்து விட்டான்.
அதனைக் கண்டு பழனியின் மனைவிக்கு ஆத்திரமாக வந்தது. பழனியை விவசாயம் செய்யும்படி வற்புறுத்தினாள்.
சோம்பேறியான பழனி அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சும்மாவே இருந்துவிட்டான். பழனியின் வீட்டிலிருந்த அரிசி மூட்டையில் உள்ள அரிசியெல்லாம் காலியாகத் தொடங்க, அவன் சாப்பாட்டிற்கு அரிசி வாங்க பணம் இல்லாமல் திண்டாடினான்.
அறுவடை காலம் நெருங்கியதும் மற்ற விவசாயிகள் தங்கள் வயலில் விளைந்த நெற்கதிர்களை அறுத்து, நெற்குவியல்களை மூட்டை மூட்டையாக எடுத்துச் சென்றார்கள்.
அதனைப் பார்த்து பழனியால் பொறாமைப்படத்தான் முடிந்தது. குறித்த காலத்தில் விவசாயம் செய்து முடிக்காததால் தன் குடும்பம் இன்று வறுமையில் வாடுகிறதே என்று கவலையடைந்தான்.
இனிமேல் எந்த வேலையையும் காலம் பார்த்துச் செய்ய வேண்டுமென்று தன்னைத் திருத்திக் கொண்டான்.
நீதி:
பருவம் பார்த்து பயிர் செய்வதுபோல்,எந்தச் செயலையும் காலம் பார்த்து உடனுக்குடன் செய்து முடிக்க வேண்டும்.
இன்றைய செய்திகள்
No comments