Breaking News

செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் மாற்றம்.! ஜனவரி மாதம் முதல் அமலுக்கு வருகிறது.?

 


செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வரி மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய அரசால் பெண்களுக்கு கொண்டு வரப்பட்ட முக்கிய சேமிப்பு திட்டம் தான் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம். இது, தமிழில் செல்வமகள் சேமிப்பு திட்டமாக 2014-ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. 10 வயதிற்கு உட்பட்ட பெண்குழந்தைகள் பெற்றோர் அல்லது காப்பாளர் உதவியுடன் இந்த கணக்கை இந்தியாவில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் தொடங்கலாம்.

திட்ட விதிகள் :

ஒரு குடும்பத்தில் இருந்து இரண்டு பெண் குழந்தைகள் இருந்தால் இந்த கணக்கை தொடங்கலாம். பெண் குழந்தைகளுக்கு 10 வயதுக்குட்பட்டு இருக்க வேண்டும். குழந்தைகளின் பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் கணக்கைத் தொடங்கலாம். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க இதற்கு முன் வயது 10-ஆக இருந்தது தற்போது 18 வயதை தாண்டிய பெண்கள் செல்வமகள் சேமிப்பு திட்ட கணக்கை பயன்படுத்தலாம்.

10-வயதுக்கு முன்பாகவே பெண் இறந்தால், அல்லது வேறு எதாவது நோயால் அவதிப்பட்டு வந்தால் கணக்கை முடித்துக் கொள்ளலாம். ஆனால் முன்பு, பெண் இறந்தால் மட்டுமே கணக்கை மூட முடியும். இந்த திட்டத்தில் சேர்ந்தால் 250 ரூபாய் செலுத்தாவிட்டாலும் வட்டி தொடர்ந்து வரும். ஒரு குடும்பத்தில் 2 பெண்களுக்கு மட்டுமே செல்வமகள் சேமிப்புத் திட்டத்தில் முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டது. இந்த விதியை மாற்றி மூன்றாவது குழந்தை பிறந்தால் கூட மூன்று குழந்தைகள் வரை செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்யலாம். முதல் இரண்டு பெண் குழந்தை இரட்டை குழந்தையாக பிறந்து இருக்க வேண்டும்.

திட்டத்தில் மாற்றம்

செல்வமகள் சேமிப்பு திட்டத்திற்கான வரி மீண்டும் உயர்த்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜனவரி மாதம் புதிய வரி விதிப்பு அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்தால், பல ஆயிரங்களை சம்பாதிக்க முடியும். குறிப்பாக, மாதம் 2,000 ரூபாயை 15 ஆண்டுகள் முதலீடு செய்தால், வட்டியோடு சேர்த்து உங்களுக்கு ரூ.11.16 லட்சம் கிடைக்கும்.

No comments