மத்திய அரசு வழங்கும் ரூ.5 லட்சத்திற்கான இலவச காப்பீட்டு அட்டை!! எப்படி விண்ணப்பம் செய்வது?
நாட்டு மக்களுக்கு ரூ.5 லட்சத்திற்கான காப்பீட்டு அட்டையை மத்திய அரசு வழங்கி வருகிறது.சாமானிய மக்களும் உயர் தர சிகிச்சை பெற வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் யோஜனா என்ற திட்டத்தை மத்திய அரசு கொண்டுவந்தது.
இத்திட்டத்தின் வாயிலாக காப்பீட்டு அட்டை வைத்திருப்பவர்கள் ரூ.5,00,000 வரை இலவச மருத்துவம் பார்த்துக் கொள்ள முடியும்.அரசு மருத்துவமனை மட்டுமல்ல தனியார் மருத்துவமனையிலும் இலவச சிகிச்சை பெற்றுக் கொள்ள முடியும் என்பதே இத்திட்டத்தின் சிறப்பு.
இந்த காப்பீட்டு அட்டை இந்தியாவில் உள்ள அனைத்து மருத்துவ மனையிலும் செல்லுபடியாகாது.அரசு பட்டியலில் இடம் பெற்றுள்ள மருத்துவமனைகளில் மட்டுமே இலவச சிகிச்சை செய்து கொள்ள முடியும்.மத்திய அரசின் இந்த திட்டம் நாட்டு மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது.
அனைத்து மக்களுக்கும் இந்த இலவச மருத்துவ காப்பீட்டு அட்டை கிடைப்பதால் மருத்துவ செலவு பற்றிய கவலை இனி இல்லை.மத்திய அரசின் இந்த ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 10 முதல் 12 கோடி மக்கள் இலவசமாக சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
உயிருக்கு ஆபத்தான நோய்களான புற்றுநோய்,சிறுநீரக நோய்,இதயம் சம்மந்தபட்ட நோய்,மூட்டு வலி,கல்லீரல் நோய் போன்ற பல நோய்களுக்கு இந்த இலவச காப்பீட்டு திட்டத்தின் மூலம் சிகிச்சை பெற்றுக்கொள்ள முடியும்.
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு தேவைப்படும் ஆவணங்கள்:
1)ஆதார் கார்டு
2)ஓட்டர் ஐடி
3)பான் கார்டு
4)முகவரிச் சான்றிதழ்
ஆயுஷ்மான் பாரத் யோஜனா திட்டத்திற்கு விண்ணப்பிக்கும் முறை:
மத்திய அரசின் https://pmjay.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தை அணுகி 'ஏம் ஐ எலிஜிபில்' என்பதை தேர்ந்தெடுக்கவும்.
பிறகு உங்கள் மொபைல் எண்ணை பதிவு செய்து கேப்ட்சாவை என்டர் செய்யவும்.பிறகு OTP என்பதை கிளிக் செய்து பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிற்கு வரும் OTP எண்ணை என்டர் செய்யவும்.
பிறகு ஆதார் கார்டு,பான் கார்டு,முகவரிச் சான்றிதழ் உள்ளிட்டவற்றை வைத்து இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம்.
No comments