நல்ல மனசு கொண்டவர்களை 'இந்த' 7 அடையாளங்களை வைத்து கண்டுபிடிக்கலாம்!!
நம்மில் பலருக்கு, "நாம் உண்மையாகவே நல்ல மனம் படைத்தவராக இருக்கிறோமா?
அல்லது அப்படி நடிக்கிறோமா?" என்ற சந்தேகம் இருக்கும். நல்லது செய்வதால் ஒருவர் நல்லவர் ஆகிவிடப்போவதில்லை, யாருக்கும் உதவி செய்யாதவர்கள் தீய மனம் படைத்தவர்களும் இல்லை. சிலர் நல்ல மனம் படைத்தவர்கள் என்பதை, இந்த யுனிவர்ஸே சில அறிகுறிகளின் மூலம் காண்பிக்கும். அப்படிப்பட்ட சில அடையாளங்கள் குறித்து இங்கு பார்ப்போம்.
1.குழந்தைகள் உங்களிடம் தானாக வருவர்:
சில குழந்தைகள், அனைவரிடமும் எளிதில் சென்று விடும். சில குழந்தைகள், யாரை பார்த்தாலும் சிடுசிடுவென முகத்தை வைத்துக்கொள்ளும். இதில் எந்த வகை குழந்தைகளை நீங்கள் கடந்து வந்தாலும் அவை நல்ல மனம் படைத்தவர்களிடம் எந்த வித சிணுங்களும் இன்றி சென்று விடும். குழந்தைகள் உங்களிடம் ஏதேனும் பேசுகிறார்கள் அல்லது, உங்களுடன் சேர்ந்து சிரிக்கிறார்கள் என்றால் உங்களுக்குள் இருக்கும் நல்ல மனம், அவர்களுக்கு தெரிகிறது என்று அர்த்தம்.
2.மிருகங்கள் உங்களுக்கு அருகில் வரும்:
ஐந்தரிவு கொண்ட மிருகங்களுக்கும் நல்ல மனம் படைத்தவர்களை கண்டுகொள்ளும் திறன் இருக்கிறதாம். அது உங்களை சுற்றி பறக்கும் பறவையாக இருக்கலாம், தெருவில் செல்லும் நாய், வீட்டருகே இருக்கும் பூணை உள்ளிட்டவை உங்களை பார்த்தவுடன் உங்களுக்கு அருகில் வரும். கணிவு, இரக்கம் உள்ளிட்டவை யார் இதயத்தில் இருக்கிறதோ, அவர்களை மிருகங்கள் அறிந்து கொள்ளுமாம்.
3.அந்நியர்களிடம் இருந்து பாராட்டு:
உங்களுக்கு யாரென்றே தெரியாதவர்கள், உங்களை பற்றி அதிகம் தெரியாதவர்கள், உங்களை பாராட்டுவர். அந்த பாராட்டுகள் உங்களின் அழகு குறித்து மட்டுமல்ல, உங்களிடம் இருக்கும் பாசிடிவ் எனர்ஜியை பற்றியும் இருக்கும். யாரென்றே தெரியாதவர்களும் உங்கள் எனர்ஜியால் நன்றாக உணர்வதால் இது நடக்குமாம்.
4.நம்பிக்கைக்குரியவராக மாறுவீர்கள்:
உங்கள் நண்பர்கள், உங்களை சுற்றி இருப்பவர்கள் அவர்களின் எண்ணங்கள், உணர்ச்சிகள் மற்றும் வாழ்க்கை போராட்டங்களை உங்களிடம் கூறுவர். இது, அவர்கள் உங்களை நம்பிக்கைக்குரியவராகவும், புரிந்துணரும் திறன் கொண்டவராகவும் காண்பிக்கிறது. இதனால், தனக்குள் இருக்கும் விஷயங்களை உங்களிடம் தெரிவிக்க அவர்கள் தயங்குவதில்லை.
5.இயற்கை பதிலளிக்கும்:
நீங்கள் இருக்கும் இடத்தில் அல்லது உங்களை சுற்றி எப்போதும் பூக்களும் பட்டாம்பூச்சுகள் இருந்து கொண்டே இருக்கும். இது, உங்களுக்குள் இருக்கும் நல்ல மனதை இயற்கை புரிந்து கொண்டு, அடையாளங்களை காண்பிப்பதாக அர்த்தமாம்.
6.கணிவாக நடந்து கொள்வர்:
யாரென்றே தெரியாதவர்கள் கூட, உங்களிடம் எந்த பிரதி பலனையும் எதிர்பாராமல் கணிவாக நடந்து கொள்வர். நீங்கள் வெளியில் செல்லும் போது கதவை உங்களுக்காக திறப்பது, உதவி என்று நீங்கள் கேட்காமலேயே உதவி செய்ய ஓடி வருவது உள்ளிட்டவை இதற்கான உதாரணங்கள்.
7.பிறர் உணரும் சக்தி:
உங்களிடம் இருக்கும் நல்ல மனதை புரிந்து கொள்ளும் பலர், அதை உங்களிடம் சுட்டிக்காட்டுவர். அவர்களின் வாழ்க்கையில் நீங்கள் கூறிய ஒரு விஷயம் எந்தெந்த மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதையும் காண்பிப்பர். உங்களை சுற்றி இருப்பவர்களை நீங்கள் மகிழ்ச்சி படுத்த வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அவர்கள், உங்கள் அருகில் இருந்தாலே குஷியாகி விடுவர். அது மட்டுமல்ல, "உங்கள் அருகில் இருந்தால் பாசிடிவாக இருக்கிறது" என்பதையும் கூறுவர்.
No comments