ஓசூரில் மாணவியை தாக்கிய உடற்கல்வி ஆசிரியர் கைது காரணமான ஆசிரியையை கைது செய்ய வலியுறுத்தல்:
ஓசூரில், அரசு உதவி பெறும் பள்ளி மாணவியை தாக்கிய உடற்-கல்வி ஆசிரியரை போலீசார் கைது செய்த நிலையில், அவர், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார்.
பிரச்னைக்கு காரணமான ஆசிரியையை கைது செய்ய வேண்டும் என, பாதிக்கப்பட்ட
மாணவியின் தாயார் வேண்டுகோள் விடுத்துள்ளாளர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர்
பாகலுார் சாலையில், எலுவப்-பள்ளி அருகே யோகிவேமனா பள்ளியில்,
பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த, 23 ல், 14, 17 மற்றும் 19 வயதிற்கு
உட்பட்ட மாணவியருக்கு தனித்தனியாக, மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி
நடந்தது. இதில், ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையிலுள்ள, ஜான் போஸ்கோ அரசு உதவி
பெறும் பள்ளி மாணவியர் விளையாடி, 14, 17 வயதிற்கு உட்பட்டோருக்கான
பிரிவில் முதலிடம் பெற்றனர். கைக்கடிகாரம் போட்டிகள் முடிந்து வீடு
திரும்பும் நேரத்தில், 17 வயதிற்கு உட்-பட்டோர் பிரிவில் விளையாடிய, 14
வயது, 9ம் வகுப்பு மாணவி ஒருவர், யோகிவேமனா பள்ளியிலுள்ள கழிவறைக்கு
சென்றார்.
அப்போது கைக்கடிகாரம் ஒன்று கீழே கிடந்துள்ளது. அதை மாணவி எடுத்த நிலையில், அப்பள்ளி ஆசிரியை ஒருவர், தன் கைகடிகாரத்தை மாணவி திருடி விட்டதாக குற்றம் சாட்டினார். அப்போது மாணவி, 'கைக்கடிகாரம் கீழே கிடந்தது, நான் திருட-வில்லை' என, கூறியுள்ளார். அதை ஆசிரியை நம்பவில்லை.வைரலான வீடியோஇந்நிலையில், மாணவியரை போட்டிக்கு அழைத்து சென்ற ஜான்-போஸ்கோ பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன், 30, மாண-வியின் தாய்க்கு மொபைல்போனில் நடந்த விபரத்தை தெரிவித்-துள்ளார்.
அவர், தன் மகளை கண்டிக்க கூறியுள்ளார். இதைய-டுத்து, உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜன், யோகிவேமனா பள்-ளிக்கு வெளியே வைத்து, அனைத்து மாணவியர் முன்னிலையில், மாணவியை கண்டிப்பதாக நினைத்து, பலமுறை பலமாக தாக்-கினார். இது அங்கிருந்த, 'சிசிடிவி' கேமராவில் பதிவாகி நேற்று வீடியோ வைரலானது. இதையறிந்த, ஓசூர் கல்வி மாவட்ட அலு-வலர் (இடைநிலைக்கல்வி) ரமாவதி மற்றும் பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள், ஜான்போஸ்கோ பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியர்களிடம் நேற்று விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, பள்ளி நிர்வாகம் உடற்கல்வி ஆசிரியர் தியாகரா-ஜனை, 'சஸ்பெண்ட்' செய்து நடவடிக்கை மேற்கொண்டது. இதற்கிடையே, ஆசிரியர் தியாகராஜன் மீது, மாணவியின் தாய் பாகலுார் போலீசில் புகார் செய்தார். அதன்படி ஆசிரியர் தியாக-ராஜன் நேற்று கைது செய்யப்பட்டார்.ஆசிரியை கைதாவாராஇதற்கிடையே பாதிக்கப்பட்ட மாணவி தாயார், நேற்றிரவு நிருபர்-களிடம் கூறியதாவது:கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் - பாகலுார் சாலையில், எலுவப்-பள்ளி அருகே உள்ள யோகிவேமனா பள்ளிக்கு, வாலிபால் போட்டிக்கு சென்ற என் மகள், அங்கு கீழே கிடந்த கைக்கடிகா-ரத்தை எடுத்து, யாருடையது எனக்கேட்டு கொடுப்பதற்கு முன், அங்கு வந்த யோகிவேமனா பள்ளி ஆசிரியை, அதை என் மகள் திருடி விட்டதாக, உடற்கல்வி ஆசிரியர் தியாகராஜிடம் கூறினார். மேலும், என் மகளை தகாத வார்த்தையால் திட்டி, 'அவளை கண்-டித்தால் தான் அங்கிருந்து செல்வேன்' என கூறியுள்ளார்.
அதனால், என்னிடம் அனுமதி பெற்றுத்தான், என் மகளை உடற்-கல்வி ஆசிரியர் தியாகராஜன் அடித்தார். அதன்பின் தான், ஆசி-ரியை அங்கிருந்து சென்றார். நான் என்ன கூறுகிறேன் என, சரி-யாக புரிந்து கொள்ளாமல், ஆசிரியர் தியாகராஜனை பாகலுார் போலீசார் கைது செய்துள்ளனர். அவரை கைது செய்த போலீசார், பிரச்னைக்கு காரணமான யோகிவேமனா பள்ளி ஆசிரியையும், கைது செய்ய வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.இதற்கிடையே, மாவட்ட கலெக்டர் சரயு உத்தரவின் படி, நேற்றி-ரவு ஜான்போஸ்கோ பள்ளிக்கு வந்த, மாவட்ட குழந்தைகள் பாது-காப்பு அலுவலர்கள் இருவர், மாணவி, அவரது தாய் மற்றும் ஆசி-ரியர்களிடம் விசாரித்தனர். அப்போது, ஆசிரியர் தியாகராஜன் மீது எந்த தவறும் இல்லை என, மாணவி மற்றும் அவரது தாய் தெரி-வித்தனர்.

No comments