வீடும் கடிகாரமும்: தெரிந்துகொள்ள வேண்டிய உண்மைகள்!
சுவர் கடிகாரம் இல்லாத வீடுகளே இல்லை எனக் கூறலாம். ஆனால், பல நேரங்களில் மக்கள் தெரிந்தோ தெரியாமலோ தவறான திசையில் கடிகாரத்தை மாட்டி வைப்பது வாஸ்து குறைபாட்டிற்கு காரணமாக அமைந்து விடுகிறது.
ஒரு போதும் வீட்டின் வாசலுக்கு பக்கத்தில் சுவர் கடிகாரத்தை மாட்டாதீர்கள். இது சரியான திசையில் வைக்கப்பட வேண்டும் என்றும் வாஸ்து சாஸ்திரத்தின்படி கடிகாரத்தை தவறுதலாக கூட தெற்கு அல்லது மேற்கு திசையில் மாட்டக் கூடாது என்கிறார்கள்.
கடிகாரங்களை வீட்டின் வடக்கு பக்கம் அல்லது வடகிழக்கு பக்கமாக பார்த்து மாட்டுங்கள். சுவர் கடிகாரத்தை தென்கிழக்கு, தென்மேற்கு பக்கமாக மாட்டாதீர்கள். அது நல்லதல்ல. அத்தகைய சூழலில், பல நேரங்களில் எதிர்மறையான ஆற்றல் வீட்டிற்குள் நுழைந்து விடுகிறது. நீங்கள் சுவர் கடிகாரத்தை சரியான திசையில் வைத்தால், அது உங்கள் வீட்டிற்கு நல்ல அதிர்ஷ்டத்தை கொண்டு வரும்.
சுவர் கடிகாரம் மாட்டுவதற்கு கிழக்கு மற்றும் வடக்கு திசைகள் சிறந்தவை எனவும் . நீங்கள் வடக்கு நோக்கிய சுவரில் ஒரு கடிகாரத்தை மாட்டினால் அந்தச் சுவருக்கு நீலம் அல்லது வானம் நீல வண்ணம் பூசலாம். ஏனெனில், அந்தத் திசை நீர் திசையை குறிக்கிறது. அத்தகைய சூழலில், இந்த நிறத்துடன் ஒரு கடிகாரத்தை அங்கு நிறுவுகையில் நேர்மறை ஆற்றல் நான்கு மடங்கு அதிகரிக்கிறது.
கடிகாரத்தை கிழக்கு திசையில் மாட்டுவதால் அதிக அளவிலான நன்மைகள் வரும் . அங்கே ஒரு கடிகாரத்தை வைத்தால், காலப்போக்கில் உங்கள் வீட்டில் அதிக அளவிலான பலன்கள் வர ஆரம்பிக்கும். வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிக அளவில் இருக்கும். சண்டை, சச்சரவு அல்லது பணப் பற்றாக்குறை போன்ற விஷயங்கள் வீட்டில் இருக்காது. உங்கள் படுக்கையறையில் சுவர் கடிகாரத்தை மாட்டினாலும் கூட வடக்கு மற்றும் கிழக்கு திசையில் மட்டுமே நிறுவ வேண்டும்.
வாஸ்துபடி கடிகாரத்தை படுக்கையறையில் படுக்கைக்கு முன் வைக்கக் கூடாது. படுக்கைக்கு முன்னால் ஒரு கடிகாரம் இருந்தால், படுக்கையின் பிரதிபலிப்பு கடிகாரத்தின் மீது விழும். அப்படி நடந்தால் அது மோசமான விளைவை ஏற்படுத்தும்.
கடிகாரத்தை எக்காரணம் கொண்டும் தெற்கு பக்கம் மாட்டாதீர்கள். வேறு பக்கம் மாட்டிக் கொள்ளுங்கள். அதேபோல், உடைந்த கடிகாரத்தை மாட்டாதீர்கள். பெரும்பாலான வீடுகளில் வீட்டின் கதவுகளுக்கு மேலே கடிகாரம் மாட்டியிருப்பதை பார்த்திருப்போம். அது நல்லதல்ல என்கிறது வாஸ்து சாஸ்திரம். கதவுகளுக்கு மேல் உள்ள சுவற்றில் கடிகாரத்தை பொருத்துவதால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் ஏற்படும் என்று வாஸ்து நிபுணர்கள் கூறுகின்றனர்.
எப்போதும் சுவர் கடிகாரங்களில் சரியான நேரத்தையே வையுங்கள். இல்லாவிட்டால் அது உங்களை உங்கள் இலக்கை அடைய தடையாக இருக்குமாம். கடிகாரம் பழுதடைந்து இருந்தாலோ, உடைந்து இருந்தாலோ அதை வீட்டில் வைக்கவே கூடாது. ஓடாத கடிகாரங்கள், வீட்டில் பணப் பிரச்னையை ஏற்படுத்தும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். ஓடாத கடிகாரத்தை போல் வாழ்க்கையும் ஸ்தம்பித்து நின்று போகலாம் என்று வாஸ்து சாஸ்திரம் கூறுகிறது. கடிகாரங்கள் பழுதடைந்தால் உடனே சரி செய்ய வேண்டும். சரி செய்ய முடியவில்லை என்றால் உடனே
அப்புறப்படுத்த வேண்டும். பேட்டரியினால் இயங்கும் கடிகாரம், நின்று விட்டால் உடனடியாக பேட்டரியை மாற்றி சரி செய்ய வேண்டும். அதேபோன்று கடிகாரத்தின் மீது தூசி ஏதும் இல்லாமல் நன்றாகப் பராமரிக்க வேண்டும்.
பெண்டுலம் கொண்ட கடிகாரம், வீட்டிற்கு நேர்மறை ஆற்றலை கொடுக்கும் என்கின்றனர் வாஸ்து நிபுணர்கள். அதேபோல் ஏதேனும் இசையை இசைக்கும் கடிகாரமும், வீட்டிற்கு நல்லது. பெண்டுலத்தின் ஒளியும், கடிகாரத்தில் இருந்து வரும் மெல்லிசையும், மனதிற்கு இதத்தை தருவதோடு, வீட்டில் நல்ல சூழல் ஏற்பட உதவும்.
No comments