Breaking News

தீபாவளிக்கு முந்தைய நாள் புதன் கிழமையும் விடுமுறை.? அப்போ 5 நாட்களா.? தமிழக அரசு முடிவு என்ன.?

 


தீபாவளி பண்டிகைக்கு நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் 30ஆம் தேதியும் விடுமுறை அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

தமிழக அரசு கூடுதல் விடுமுறை அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது

தீபாவளி கொண்டாட்டம்

படிப்பை முடித்து லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை தேடி பல்வேறு ஊர்களுக்கும், பல மாநிலங்களுக்கும், பல நாடுகளுக்கும் பயணம் செய்கின்றனர். தங்களது வாழ்வாதாரத்திற்காகவும், குடும்பத்தின் முன்னேற்றத்திற்காகவும் வேறு ஊரில், மொழி தெரியாத இடங்களில் பணி புரிந்து வருகின்றனர். அந்த வகையில் பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்களை விட்டு புதிய இடத்தில் பணிக்காக செல்கின்றனர்.

அப்படி வெளியூர் செல்லும் நபர்களுக்கு பொங்கல், தீபாவளி, புத்தாண்டு, கிறிஸ்துமஸ், ரம்ஜான் உள்ளிட்ட விஷேச நாட்கள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களும் தான் மகிழ்ச்சி அளிக்கக்கூடியதாக இருக்கும். அப்போது தான் தங்களது குடும்பத்தை பார்க்கவும் பண்டிகையை சொந்த ஊரில் கொண்டாடவும் செல்வார்கள். இதற்காக சிறப்பு ரயில் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும்.

நவம்பர் 1ஆம் தேதி விடுமுறை

கடந்த தீபாவளி பண்டிகை தின கொண்டாட்டத்திற்காக சென்னையில் இருந்து மட்டும் 20 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு பயணம் செய்திருந்தனர்.
இந்தநிலையில் இந்தாண்டும் பல லட்சம் பேர் தீபாவளி பண்டிகை கொண்டாட்டத்திற்காக பயணம் செய்ய திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் இந்த ஆண்டு தீபாவளி அக்டோபர் 31ஆம் தேதி வியாழக்கிழமை வருகிறது.

இடையில் ஒரு நாள் மட்டும் அதாவது வெள்ளிக்கிழமை மட்டும் பணி நாட்களாக உள்ளது. இதனையடுத்து வெள்ளிக்கிழமை விடுமுறை விடவேண்டும் என்ற கோரக்கை எழுந்தது. இதனையேற்ற தமிழக அரசு நவம்பர் 1ஆம் தேதி அதாவது வெள்ளிக்கிழமை தமிழகம் முழுவதும் பொது விடுமுறை அறிவித்தது. இதன் காரணமாக தீபாவளி பண்டிக்கைக்கு தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மட்டுமில்லாமல் அரசு ஊழியர்களும் உற்சாகத்தில் உள்ளனர்.


புதன் கிழமை விடுமுறை கிடைக்குமா.?

இந்தநிலையில் தீபாவளி பண்டிகை வியாழக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு முந்தைய நாள் புதன்கிழமை பணி நாட்களாக உள்ளது. புதன்கிழமை பணியை முடித்து அடுத்த நாள் வியாழக்கிழமை தீபாவளி பண்டிகையை கொண்டாட செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே தீபாவளி பண்டிகைக்கு ஒரு நாள் முன் கூட்டியே விடுமுறை அளிக்க வேண்டும் என கோரிக்கை மீண்டும் எழுந்துள்ளது.

தீபாவளிக்கு முந்தைய நாள் அக்டோபர் 30ம் தேதி புதன்கிழமை விடுமுறை நாளாக அறிவிக்க தமிழ்நாடு அரசுக்கு சிவகாசி பட்டாசு உற்பத்தியாளர் சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் பட்டாசு விற்பனை செய்யும் கடைகளின் உரிமத்தையும் நவம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். இந்தநிலையில் புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையையொட்டி 5 நாட்கள் தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. எனவே தமிழக அரசு விடுமுறை விடுமா.? என்ற கேள்வி எழுந்துள்ளது.

நோ சொல்லும் தமிழக அரசு

இது தொடர்பாக தலைமை செயலக வட்டாரத்தில் கூறுகையில் ஏற்கனவே நவம்பர் 1ஆம் தேதி அரசு விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது புதிதாக அக்டோபர் 30ஆம் தேதி விடுமுறை விட வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. ஆனால் தற்போது உள்ள நிலையில் கூடுதல் விடுமுறை விடப்படுவதற்கு வாய்ப்பு இல்லையென தெரிவித்துள்ளனர்.

No comments