உங்கள் செல்போனின் ஆயுட்காலம் என்ன..? எப்போது மாற்ற வேண்டும்.. இப்படி ஒரு ட்ரிக் இருக்கா?
இன்றைய நவீன காலத்தில் செல்போன் என்பது வெறும் அழைப்புகளுக்காக பயன்படுத்துவதற்கு மட்டுமல்லாமல், பல பயனுள்ள அம்சங்களைக் கொண்டுள்ளன, இதன் உதவியுடன் நமது பல பணிகள் எந்த நேரத்திலும் முடிக்கப்படுகின்றன.
நம் அன்றாட வாழ்க்கயில் பயன்படுத்தும் ஸ்மாட்போனின் ஆயுள் காலம் என்னவென எப்போதாவது யோசிச்சிருக்கீங்களா?
இந்த கேள்விக்கான பதில் சிலருக்கு தெரிந்திருக்கலாம், ஆனால் இன்னும் பலருக்கு இந்த கேள்விக்கான பதில் தெரியவில்லை. இந்த பதிவில் உங்களுக்கு மொபைல் லைஃப் ஸ்பான் என்ன, அதாவது எத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தொலைபேசியை மாற்ற வேண்டும் என்பது பற்றிய பயனுள்ள தகவல்களை பார்க்கலாம்..
தொலைபேசியை எப்போது மாற்ற வேண்டும்? எந்த ஒரு புதிய ஃபோன் அறிமுகப்படுத்தப்பட்டாலும், அந்த ஃபோன் எத்தனை ஆண்டுகளுக்கு மென்பொருள் மற்றும் பாதுகாப்பு புதுப்பிப்புகளைப் பெறும் என்று நிறுவனம் கூறுகிறது. சந்தையில் இருக்கும் சில நிறுவனங்கள் 5 வருடங்களுக்கு அப்டேட் கொடுக்கின்றன, சில நிறுவனங்கள் 7 வருடங்களுக்கு அப்டேட் கொடுக்கின்றன.
நீங்கள் 5 வருடங்கள் அல்லது அதற்கு மேல் போனை வாங்கியிருந்தால், உங்கள் ஃபோன் நிறுவனத்திடமிருந்து புதுப்பிப்புகளைப் பெறுவதை நிறுத்தினால், உங்கள் தொலைபேசி காலாவதியானது என்று அர்த்தம். அத்தகைய சூழ்நிலையில், தொலைபேசி பாதுகாப்பு அபாயங்கள் மற்றும் பொருந்தக்கூடிய சிக்கல்களை எதிர்கொள்ளக்கூடும். இந்த சிக்கலை நீங்கள் தவிர்க்க விரும்பினால், தொலைபேசியை மாற்றுவது நல்லது.
ஆயுள் காலம் தாண்டிய பிறகும் செல்போனை பயன்படுத்த என்ன செய்ய வேண்டும்? முதலில் நாம் வாங்கும் மொபைலில் சரியான ஸ்க்ரீன் ப்ரொடக்டரை வாங்கிக் கொள்ளவும். ஏனெனில் செல்போன் டிஸ்பிளேவில் ஏதேனும் பிரச்சினை ஏற்பட்டால் நீங்கள், மொபைல் வாங்கிய மதிப்பில் 40 முதல் 45 சதவீதம் வரை செலவு செய்ய வேண்டியிருக்கும். மொபைல் போன் வாங்கும் போது அதற்கான சரியான கவர் வாங்கி விட வேண்டும். மாடர்னாக, ஸ்டைலாகவும் இருக்க வேண்டும் என்று நினைக்காமல் மொபைல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அதற்கேற்ப கேஸ் கவரை தெரிவு செய்து வாங்க வேண்டும்.
தற்போது வரும் மொபைல் போன்களின் பேட்டரிகளில் 30 சதவீதம் ஆனாலே சார்ஜ் போட்டுவிட வேண்டும். மேலும் 100 சதவீதம் என்று சார்ஜ் போடாமல் 90 சதவீதத்திலேயே நிறுத்திக் கொள்ளவும். தற்போது வரும் மொபைல் போன்களின் பேட்டரிகளில் 30 சதவீதம் ஆனாலே சார்ஜ் போட்டுவிட வேண்டும். மேலும் 100 சதவீதம் என்று சார்ஜ் போடாமல் 90 சதவீதத்திலேயே நிறுத்திக் கொள்ளவும்.
மொபைல் போனை சூடாகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். சூரிய வெளிச்சத்தில் நீங்கள் செல்போனை பயன்படுத்த வேண்டும் என்றால் அதிகளவு பிரைட் வைக்க வேண்டியிருக்கும். இதனால் மொபைல் போன் சூடாகும். மேலும் இறுக்கமான ஜீன்ஸ் பேண்டில் மொபைல் போனை வைக்க வேண்டாம். மொபைல் போனை அவ்வப்போது அப்டேட் செய்து கொள்ள வேண்டும். நிறுவனங்கள் சில ஆண்டுகள் வரை செக்யூரிட்டி அப்டேட் கொடுப்பதால் உடனடியாக அப்டேட் செய்து கொண்டால், மொபைல் செயல்பாடு அதிகரிக்கும். இவ்வாறு மொபைல் போனை கவனமாக வைத்துக் கொண்டு உங்களது மொபைலின் ஆயுள் சற்று அதிகமாகும்.
No comments