தீபாவளிக்கு மறுநாள்..!! அனைத்து இறைச்சி கடைகளையும் மூட அதிரடி உத்தரவு..!! என்ன காரணம்..?
இந்தியாவில் சாத மதங்களைக் கடந்து பலரும் கொண்டாடும் பண்டிகை என்றால் அது தீபாவளி தான். அந்த வகையில், இந்தாண்டு தீபாவளி பண்டிகை வரும் 31ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
இதற்காகப் பொதுமக்கள் இப்போதே புத்தாடை, இனிப்பு, பட்டாசுகள் ஆகியவற்றை பெரும்பாலும் வாங்கிவிட்டனர். மேலும், சென்னை வாசிகள் தங்கள் சொந்த ஊர் நோக்கியும் படையெடுக்க தொடங்கி விட்டனர்.
இந்நிலையில், தீபாவளிக்கு மறுநாள் அதாவது நவ. 1ஆம் தேதி வெள்ளிக்கிழமை சமணர்களின் முக்கிய தினமான மகாவீர் நிர்வான் தினம் கொண்டாடப்பட உள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு வரும் நவ.1ஆம் தேதி இறைச்சிக் கடைகள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் இறைச்சிக் கூடங்கள் மகாவீர் நிர்வான் தினத்தை முன்னிட்டு வரும் வெள்ளிக்கிழமை மூடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. மேலும், சமணர்கள் வழிபடும் ஜெயின் கோயில்களில் இருந்து சுமார் 100 மீட்டர் சுற்றளவில் அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்படும் என்றும் அன்றைய தினம் இந்த கடைகளில் இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments