Breaking News

அனுபவம் வேண்டாம்.. பி.காம், பிபிஏ படித்தவர்களுக்கு ஜாக்பாட்.. HCL-ல் காத்திருக்கும் வேலைவாய்ப்பு

 

எச்சிஎல் ஐடி நிறுவனத்தில் இருந்து காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. பி.காம், பிபிஏ படித்து எந்தவித அனுபவமும் இல்லாதவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

உத்தர பிரதேச மாநிலம் நொய்டாவை தலைமையிடமாக கொண்டு நாட்டின் பல்வேறு இடங்களிலும், வெளிநாடுகளிலும் செயல்பட்டு வருகிறது எச்சிஎல் நிறுவனம்.

நம் நாட்டை எடுத்து கொண்டால் பெங்களூர், உப்பள்ளி, குர்கிராம், ஹைதராபாத், கொச்சி, கொல்கத்தா,லக்னோ, மும்பை, நாக்பூர், புனே, விஜயவாடா உள்ளிட்ட இடங்களிலும் எச்சிஎல் நிறுவனம் இயங்கி வருகிறது.

தமிழ்நாட்டிலும் சென்னை, கோவை மதுரை உள்ளிட்ட இடங்களில் எச்சிஎல் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் எச்சில் சார்பில் புதிய வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன் விபரம் வருமாறு: எச்சிஎல் நிறுவனத்தில் தற்போது கிராசூவேட் டிரெய்னி (Graduate Trainee) பணியிடங்கள் நிரப்பபட உள்ளது.

இதில் 2 பொறுப்புகளுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். முதலாவது என்னவென்றால் கிராசூவேட் டிரெய்னி (Financial Shared Services), 2வது என்னவென்றால் கிராசூவேட் டிரெய்னி (எச்ஆர் சர்வீசஸ்) பொறுப்பாகும். மேலும் பணி அனுபவம் இல்லாதவர்களும் 2 பொறுப்புகளுக்கும் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிகளுக்கு பிகாம், பிகாம் (Hons), பிபிஏ படிப்பை முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம். குறிப்பாக விண்ணப்பத்தாரர்கள் இந்த படிப்பை 2023/2024ம் ஆண்டில் 60 சதவீத மதிப்பெண்களுடன் முடித்திருக்க வேண்டும். மேலும் பணி வாரியாக பார்த்தால் கிராசூவேட் டிரெய்னி (Financial Shared Services) பணிக்கு பிகாம் முடித்தவர்கள் மட்டுமே விண்ணப்பம் செய்ய முடியும். கிராசூவேட் டிரெய்னி (எச்ஆர் சர்வீசஸ்) பணிக்கு பிகாம், பிபிஏ முடித்தவர்கள் விண்ணப்பம் செய்யலாம்.

இந்த பணிக்கு தேர்வாகும் நபர்கள் பணியமர்த்தப்படும் இடம், மாத அல்லது ஆண்டு சம்பளம் பற்றி எதுவும் தெரிவிக்கப்படவில்லை. கடைசி கட்ட இண்டர்வியூவில் அதுபற்றிய விபரங்கள் தெரிவிக்கப்பட வாய்ப்புள்ளது.

தகுதி மற்றும் விருப்பம் உள்ளவர்கள் உடனடியாக எச்சிஎல் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளம் சென்று விண்ணப்பம் செய்யலாம். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி எதுவும் குறிப்பிடப்படவில்லை. இதனால் எப்போது வேண்டுமானாலும் விண்ணப்ப பதிவு முடிவுக்கு வரலாம். எனவே முடிந்த வரை சீக்கிரமாக விண்ணப்பம் செய்யலாம்.

No comments