Breaking News

இன்று உருவாகும் புதிய காற்றழுத்தம்!. 13 மாவட்டங்களுக்கு கனமழை டார்கெட்!. லிஸ்ட் இதோ!

 


மத்திய அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்தும் உருவாக உள்ளதால் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழையை தொடர்ந்து மத்திய அந்தமான் கடல் பகுதியில் சுமார் 5.8 கி.மீ. உயரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் மத்திய வங்கக்கடலின் கிழக்கு பகுதி மற்றும் அதை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதியில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இது வடமேற்கு திசையில் நகர்ந்து 23ம்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

இதுதவிர, வட தமிழக பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்காரணமாக இன்றுமுதல் 24ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிகிறது. அத்துடன் 22, 23 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சில இடங்களிலும் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

அந்தவகையில் தமிழகத்தில் இன்று 13 மாவட்டங்களில் கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதால் சென்னை வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது. ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, சேலம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், கடலூர், பெரம்பலூர், திருச்சி, மயிலாடுதுறை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. சென்னையில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments