Breaking News

பெண்களுக்கான சூப்பர் திட்டம்.! ரூ.3 லட்சம் கடன்.. ஆனால் ரூ.1.50 லட்சத்தை திருப்பிக் கொடுத்தால் போதும்.!!!

 


நாட்டில் மத்திய அரசு மாநில அரசும் பெண்களின் நலனுக்காக பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

குறிப்பாக தமிழகத்தில் பெண்கள் நலனுக்காக மகளிர் உரிமை தொகை திட்டம், பெண் குழந்தைகளுக்கு சிறப்பு திட்டங்கள், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மத்திய அரசாங்கமும் செல்வமகள் சேமிப்பு திட்டம், பெண்கள் தொழில் தொடங்க குறைந்த வட்டியில் கடன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் மத்திய அரசாங்கம் பெண்களுக்காக உத்தியோகினி என்ற சிறப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.

இந்த திட்டத்தில் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு 3 லட்ச ரூபாய் வரையில் பொதுத்துறை மற்றும் வணிக வங்கிகளில் கடன் கிடைக்கும். இந்த திட்டத்தில் 3 லட்சம் வரை கடன் பெறும் பிற்படுத்தப்பட்ட பெண்கள் அதில் பாதியை மட்டும் அதாவது 1.50 லட்ச ரூபாய் மட்டும் திருப்பி செலுத்தினால் போதுமானது. இதில் கிராமத்தில் வசிக்கும் பெண்கள் மற்றும் தனியாக வசிக்கும் பெண்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் தொழில் தொடங்க விரும்பும் பெண்களுக்கு இது ஒரு சிறந்த திட்டமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

No comments