Breaking News

ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ். இவர்களுக்கு 75% கட்டண சலுகை. வெளியான சூப்பர் அறிவிப்பு.!!!

 


நாட்டில் பெரும்பாலான பயணிகள் ரயிலில் செல்வதை விரும்புகிறார்கள். ஏனெனில் நீண்ட தூர பயணங்களுக்கு ரயில் பயணம் என்பது ஒரு சிறந்த பயணமாகவும் வசதிகள் நிறைந்ததாகவும் இருக்கிறது.

குறிப்பாக பெண்கள், குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் என பலதரப்பட்டவர்களுக்கும் ரயில் பயணமே நீண்ட தூரங்களுக்கு சிறந்ததாக உள்ளது. இதனால் இந்தியாவில் லட்சக்கணக்கான பயணிகள் ரயில்களில் செல்வதை விரும்புகிறார்கள். ஒவ்வொரு நாளும் ரயிலில் செல்லும் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்துதான் வருகிறது. இதன் காரணமாக பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அவ்வப்போது சலுகைகளையும் வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது ரயில்களில் குறிப்பிட்ட சிலருக்கு 75 சதவீதம் வரை கட்டண சலுகையானது வழங்கப்படுகிறது. இது பற்றி தற்போது பார்ப்போம். அதாவது கண் பார்வை தெரியாத மாற்று திறனாளிகள், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், உடல்நிலை முழுவதும் பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோருக்கு பொது பெட்டிகள், 3 ஏசி பெட்டிகள் மற்றும் ஸ்லீப்பர் கோச் போன்றவைகளில் 75% வரை கட்டண சலுகையானது வழங்கப்படுகிறது. இதனையடுத்து முதல் தர மற்றும் இரண்டாம் தர ஏசி பெட்டிகளில் 50% வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும் இதே போன்று கல்வி மற்றும் சுற்றுலா போன்றவைகளுக்காக செல்லும் மாணவர்களுக்கும் 50 சதவீதம் முதலில் 75% வரை கட்டண சலுகை வழங்கப்படுகிறது.

No comments