Breaking News

நடுரோட்டில் மாணவியை கொடூரமாக தாக்கிய ஆசிரியர்.. அதிரடி கைது.. விசாரணையில் அதிர்ச்சி!

 

சூரில் 9ஆம் வகுப்பு மாணவியை நடுரோட்டில் தாக்கியதாக அரசு உதவி பெறும் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் தியாராஜன் என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் நடுரோட்டில் பள்ளி மாணவியை கொடூரமாக தாக்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து, கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் அருகே தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியல் கடந்த 23ஆம் தேதி அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இடையே கைபந்து விளையாட்டு போட்டி நடைபெற்றது. இந்த விளையாட்டு போட்டியில் ஓசூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவிகளும் கலந்து கொண்டனர்.

நடுரோட்டில் மாணவியை தாக்கிய ஆசிரியர்

16 மாணவர்களும் 2 ஆசிரியர்களும் பாகலூர் அருகே உள்ள ஒரு தனியார் பள்ளிக்கு விளையாட்டுப் போட்டிக்காகச் சென்றனர். நிகழ்ச்சி முடிந்ததும், தனியார் பள்ளி ஆசிரியர் ஒருவர் கழிவறைக்கு சென்றார். அவர் வாட்ச்சை கீழேவிட்டு சென்றிருக்கிறார். இதனை அறிந்த 9ஆம் வகுப்பு மாணவி அதை அவரிடம் கொடுக்க முயன்றார்.

ஆனால் மாணவிகள் பேருந்தை பிடிக்கும் அவசரத்தில் இருந்ததால் அதை தன்னிடம் வைத்திருந்தார். இதற்கிடையில், உடற்கல்வி ஆசிரியரிடம் கைக்கடிகாரம் தொலைந்துவிட்டதாகவும், பள்ளியில் மாணவர்கள் ஓய்வறைக்கு அருகில் இருப்பதாகவும் கூறி, அந்த மாணவி வாட்ச்சை அவரிடம் கொடுத்திருக்கிறார்.

இதனால், ஆத்திரம் அடைந்த உடற்கல்வி ஆசிரியர் வாட்சை திருடியதாக கூறிய அவரை கொடூரமாக அடித்துள்ளார். மாணவ, மாணவிகள் முன்னிலையில் நடுரோட்டில் அந்த மாணவியை தாக்கி, கீழே தள்ளி இருக்கிறார். மேலும், அந்த மாணவியை சரமாரியாக நடுரோட்டில் தாக்கியுள்ளார்.

ஆசிரியர் சிறுமியை தாக்கியதுடன், தொலைபேசியில் அவரது தாயாரிடம் தெரிவித்தார். இதற்கு மாணவியின் தார் அடிக்க வேண்டும் என ஆசிரியரிடம் கூறியதாக தெரிகிறது. பின்னர், நடுரோட்டில் மாணவ, மாணவிகளை முன்னிலையில் 9ஆம் வகுப்பு மாணவியை தாக்கி கீழே தள்ளி இருக்கிறார். இந்த சம்பவம் அங்கிருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது.

இந்த தாக்குதலின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் முனிராஜ் உதவி பெறும் பள்ளியில் விசாரணை நடத்த மாவட்டக் கல்வி அலுவலர் ஆர்.வி.ராமாவதிக்கும், மற்றொரு டி.இ.ஓ., கோபாலப்பா விசாரணைக்கு உத்தரவிட்டார்.

அதிர்ச்சி வீடியோ:

இரு பள்ளிகளுக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு, விளக்கம் கொடுக்க வேண்டும் முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார். மேலும், மாணவியை நடுரோட்டில் தாக்கிய ஆசிரியர் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக பெண்கள் துன்புறுத்தல் தடைச் சட்டத்தின் பிரிவு 4 மற்றும் சிறார் நீதிச் சட்டம் பிரிவு 75 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில், பாகலூர் போலீசார் ஆசிரியரை கைது செய்தனர்.

தர்மபுரியைச் சேர்ந்த எம்.தியாகராஜன் (35) என்று அடையாளம் காணப்பட்டுள்ளது. இவர் ஓசூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் பணியாற்றி வந்த நிலையில், மாணவியை தாக்கிய புகாரில் அவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

நடுரோட்டில் மாணவியை தாக்கிய காட்சிகளை வெளியானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாணவர் பாதுகாப்பு மற்றும் ஆசிரியர் மாணவர்கள் உறவுகள் குறித்து கவலை எழுப்புவதாகவும், ஆசிரியர்கள் மாணவர்களை அனுதாபத்துடன் புரிந்துணர்வுடனும் கையாளுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments