Breaking News

வங்கக்கடலில் வலுபெற்ற டானா புயல்.. கோவை, கடலூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் எச்சரிக்கை

 


மிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரம் காட்டத் தொடங்கியுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை தொடங்கியுள்ளது.

நேற்றைய தினம் தென்தமிழகத்தின் அநேக இடங்களிலும், வடதமிழகத்தின் ஓரிரு இடங்களிலும் மழை பெய்துள்ளது.

அதிகபட்சமாக கோவை மாவட்டத்தில் 9 செமீ மழை பொழிவு ஏற்பட்டுள்ளது. நேற்று சென்னையில் தான் அதிகபட்ச வெப்பநிலையாக 34.6 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது.

இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் டானா புயல் உருவாகி வலுபெற்றுள்ளது. வடக்கு ஒரிசா - மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி - சாகர் தீவுகளுக்கு இடையே, வரும் 24ஆம் தேதி இரவு முதல் 25ஆம் தேதி காலை கரையை கடக்கக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் இன்று(23.10.2024) மற்றும் நாளை(24.10.2024) பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


No comments