Breaking News

ரிஸ்கே இல்லாமல் 8.2% வட்டி.. சிறு சேமிப்பு திட்டங்களில் எந்த திட்டம் முதலீட்டிற்கு சிறந்தது.?

 


பொதுவாக பணத்தை சேமிக்க வேண்டும் என்ற யோசனையில் உள்ளவர்கள் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்குமா என்பதை தெரிந்திருக்க வேண்டும்.
அந்த வகையில், சிறு சேமிப்பிற்கான அதிக திட்டங்கள் உள்ளன. நீங்கள் சிறு சேமிப்புக் கருவிகளில் முதலீடு செய்ய விரும்பினால், தற்போது கிடைக்கும் பல்வேறு திட்டங்கள் மற்றும் அவை வழங்கும் வட்டி விகிதங்கள் குறித்து முழுமையாக அறிந்திருப்பது அவசியம். இந்த சிறுசேமிப்பு கருவிகள் எந்த ஆபத்தும் இல்லாமல் உத்தரவாதமான வருமானத்தை விரும்புபவர்களுக்காக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இவற்றுக்கு மத்திய அரசு உத்தரவாதம் அளித்து இருப்பதால் இவற்றில் முதலீடு செய்வது மிகவும் பாதுகாப்பானது என்றே கூறலாம்.

மேலும், இந்த சிறுசேமிப்புக் கருவிகளில் முதலீடு செய்வது வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிவிலக்கையும் பெறலாம். இந்த சிறு சேமிப்புக் கருவிகளின் முழு விவரங்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளன. தபால் அலுவலக சேமிப்புத் திட்டம்: தபால் அலுவலக சேமிப்புத் திட்டத்தில் தனித்தனியாகவோ அல்லது கூட்டாகவோ கணக்கு தொடங்கலாம். இந்தத் திட்டத்தில் சேர குறைந்தபட்சம் ரூ.

500 டெபாசிட் செய்ய வேண்டும். இத்திட்டம் ஆண்டுக்கு 4 சதவீத வட்டியை வழங்குகிறது. தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு: தேசிய சேமிப்பு தொடர் வைப்பு கணக்கு மாதாந்திர குறைந்தபட்சம் ரூ.100ல் ஆரம்பிக்கலாம். மேலும் இந்த திட்டமானது ஆண்டுக்கு 6.7 சதவீத வட்டியை வழங்குகிறது. தேசிய சேமிப்பு மாதாந்திர கணக்கு: தேசிய சேமிப்பு மாதாந்திர கணக்கு குறைந்தபட்சம் ரூ.1000 ஆக திறக்க முடியும்.

இந்தத் திட்டத்தில், ஒரு கணக்கு வைத்திருப்பவர் அதிகபட்சமாக ரூ. 9 லட்சமும், கூட்டுக் கணக்கு வைத்திருப்பவருக்கு ரூ. 15 லட்சம் டெபாசிட் செய்யலாம். மேலும் இந்த திட்டம் ஆண்டுக்கு 7.4 சதவீத வட்டியை வழங்குகிறது. மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கு: மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டக் கணக்கில், குறைந்தபட்சம் ரூ.

1000 டெபாசிட் செய்து கணக்கு தொடங்கலாம். இந்தக் கணக்கில் அதிகபட்சமாக ரூ. 30 லட்சம் டெபாசிட் செய்யலாம். மேலும் இந்த திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டியை வழங்குகிறது. பொது வருங்கால வைப்பு நிதி: குறைந்தபட்சம் ரூ.500, அத்துடன் அதிகபட்சமாக ரூ.

1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம். மேலும் இந்த திட்டம் ஆண்டுக்கு 7.1 சதவீத வட்டியை வழங்குகிறது. சுகன்யா சம்ரித்தி யோஜனா: சுகன்யா சம்ரித்தி யோஜனா கணக்கில், குறைந்தபட்சம் ரூ. 250, அத்துடன் அதிகபட்சமாக ரூ.

1.5 லட்சம் டெபாசிட் செய்யலாம். மேலும் இந்த திட்டமானது ஆண்டுக்கு 8.2 சதவீத வட்டியை வழங்குகிறது. தேசிய சேமிப்புச் சான்றிதழ்கள்: இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ. 1000 டெபாசிட் செய்ய வேண்டும்.

இதற்கு உச்ச வரம்பு இல்லை. மேலும் இந்த திட்டம் ஆண்டுக்கு 7.7 சதவீத வட்டியை வழங்குகிறது. கிசான் விகாஸ் பத்ரா: கிசான் விகாஸ் பத்ரா கணக்கில் ஆண்டு குறைந்தபட்சம் ரூ. 1000 டெபாசிட் செய்ய வேண்டும்.

அதற்கும் உச்ச வரம்பு இல்லை. மேலும் இந்த திட்டம் ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியை வழங்குகிறது. மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்: மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் கணக்கில் குறைந்தபட்சம் ரூ. 1000 டெபாசிட் செய்ய வேண்டும்.

மேலும் அதிகபட்சமாக ரூ. 2 லட்சம் டெபாசிட் செய்ய வேண்டும். மேலும் இந்த திட்டமானது ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியை வழங்குகிறது.

No comments