Breaking News

கணவன் மனைவிக்கிடையே தோசையால் வந்த பிரச்சனை..!! படிச்சு சிரிச்சிட்டு போங்க..!!

 


என்னங்க உங்களுக்கு தோசை போதுமா?

நான் அப்ப நாலாவது தோசை சாப்பிட்டுட்டு இருந்தேன்…

ப்ப கிச்சன்ல இருந்து என் மனைவியின் குரல்….

" ஏங்க… தோசை போதுமா…? "

" போதும்…"

" நான் இப்ப நெய் ரோஸ்ட் ஊத்த போறேன்… உங்களுக்கு வேணுமா..?"

ஆஹா.. நெய் ரோஸ்ட்…

உடனே என் கிரிமினல் மைண்ட்…

சேச்சே.., டிடெக்டீவ் மைண்ட் ஒரு திட்டம் போட்டது…

( நம்ம மைண்ட் வாய்ஸ் - நமக்குன்னா சுமாராத்தான் சுடுவா.. அதே அவளுக்குன்னா சூப்பரா சுட்டுக்குவா.. அதனால இப்ப வேணாம்னு சொல்லிட்டு., வரும்போது களவாடிக்கலாம்.. ஹாஹாஹா… சூப்பரா ஒரு நெய் ரோஸ்ட் சாப்பிடணும்னா…. எதுவுமே தப்பில்ல….)

" எனக்கு வேணாம் நிர்மலா… உனக்கு வேணும்னா சுட்டுக்க… "

" அப்புறம் கேக்க கூடாது… கேட்டாலும் குடுக்க மாட்டேன்…"

" இல்ல கேக்க மாட்டேன்…! "

( அதை எப்படி மேட்டர் போட்டு வாங்கணும்னு தெரியாதா..? நாங்க என்ன இன்னிக்கு நேத்தா கால்ல விழறோம்.. )

ரெண்டு நிமிஷத்துல.. கமகமக்கும் மணமணக்கும் நெய் ரோஸ்டோடவந்தாங்க என் Wife…

நான் என் Wife-கிட்ட…

" நிர்மலா.. அந்த ரோஸ்ட்டை எனக்கு வெச்சிடு.. நீ இன்னொன்னு சுட்டுக்க.. ப்ளீஸ்.. ப்ளீஸ்…"

என் மனைவி ஒரு முறைமுறைச்சாங்க… " உங்களுக்கு இதே வேலையா போச்சு… கேட்டா வேண்டாம்னு சொல்றது.. அப்புறம் கேக்கறது.. "

" கணவன் ஆசைப்பட்டு கேக்கும்போது இல்லன்னு சொல்லக்கூடாது ஔவையாரே ஒரு பாட்ல சொல்லி இருக்காங்க தெரியுமா..? "

" எந்த பாட்ல இப்படி எல்லாம் சொல்லி இருக்காங்க..? "

" எல்லாம் சங்ககால பாட்ல தான்.. "

" போதும்.. இந்த தோசைக்காக ஔவையாரையெல்லாம் வம்புக்கு இழுக்காதீங்க… இந்தாங்க வெச்சிக்கோங்க…. " எனக்கு அந்த தோசை வைக்கப்பட்டது..

"ஹா., ஹா.. ஹா… ப்ளான் சக்ஸஸ்…

இதை கேட்டு என் Wife சிரிச்சிகிட்டே சொன்னாங்க…

" எனக்கும் தான்… "

" உனக்குமா? அப்படின்னா..? "

" எப்படியும் கேப்பீங்கனு தெரியும்.. அதான் உங்களுக்கு எப்பவும் சுடற மாதிரியே சுட்டேன்… நெய் வாசனை மட்டும் தான் இருக்கும். இப்பதான் உண்மையான நெய் தோசை சுட்டு நான் சாப்பிட போகிறேன் "

" அடிப்பாவி.. என்ன ஒரு வில்லத்தனம்..😳 "

No comments