மாதம் ரூ.1 லட்சத்திற்கு மேல் சம்பளம்..!! 290 + காலியிடங்கள்..!! விண்ணப்பிக்க நாளையே கடைசி..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோவிலில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயன்பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணியின் பெயர் : இளநிலை உதவியாளர், சுகாதார ஆய்வாளர் உள்ளிட்ட பல பணியிடங்கள்.
காலிப்பணியிடங்கள் : 296
கல்வித் தகுதி :
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையத்தில் 8ஆம் வகுப்பு / 10ஆம் வகுப்பு / டிப்ளமோ / ITI / Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு :
விண்ணப்பதாரர்களின் குறைந்தபட்ச வயதானது 18ஆகவும், அதிகபட்ச வயதானது 45ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
இப்பணிக்கு தேர்வாகும் தகுதியானவர்களுக்கு ரூ.10,000 முதல் ரூ.1,16,000 வரை மாத ஊதியம் வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை : நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை :
இப்பணிக்கு விண்ணப்பிப்போர் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று, அதை பூர்த்தி செய்து டிசம்பர் 8ஆம் தேதிக்குள் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
No comments