Breaking News

உப்புக் கரை படிந்த உங்கள் பழைய குழாயை, புதிது போல் மாற்ற வேண்டுமா?? அப்போ இதை மட்டும் செய்யுங்க..

 


பொதுவாக நமது குளியலறை மற்றும் கிச்சனில் இருக்கும் குழாய்களில் உப்பு நீர் படிந்து இருக்கும். இதை நாம் என்ன தான் சுத்தம் செய்தாலும் குழாய்கள் பழையது போன்று தான் இருக்கும். நாம் சிறிது காலம் உப்பு கரையை சுத்தம் செய்யாமல் விட்டுவிட்டால், அது நாளடைவில் விடாப்பிடியான கரையாக மாறிவிடும். அது போன்ற விடாப்படியான கரைகளை போக்க சந்தையில் பல விதமான லிக்விட் கிடைக்கிறது. ஆனால் அந்த கெமிக்கல் நிறைந்த லிக்விட் விலையும் அதிகம் அதே சமையம் ஒரு சிலருக்கு அதில் இருக்கும் கெமிக்களால் ஒவ்வாமை ஏற்படும். ஒரு சிலருக்கு இதனால் மூச்சுத்திணறல் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. அதனால் இனி அது போன்ற லிக்விடை வாங்க வேண்டாம். அதற்க்கு பதில் வீட்டில் இருக்கும் பொருள்களை வைத்தே எப்படி உப்பு கரையை சுலபமாக போக்கலாம் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளுங்கள்.

எலுமிச்சை சாறு: எலுமிச்சை சாறு வைத்து நீங்கள் சுலபமாக உப்புக் கரையை நீக்கலாம். அதற்க்கு முதலில், ஒரு சிறிய கிண்ணத்தில் சிறிது சோப்பு பவுடர் சேர்த்து, அதில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, நன்றாக கலக்கவும். பின்னர் இந்த கலவையை உப்புக்கறை படிந்த குழாயில் தடவி ஐந்து நிமிடம் ஊற வைத்து விடுங்கள். இப்போது ஒரு ஸ்க்ரப்பரால் லேசாக தேய்த்தாலே அழுக்குகளும் நீங்கி விடும். இப்போது குழாயை தண்ணீர் ஊற்றி கழுவினால், விடாப்பிடியான கறை நீங்கி பளிச்சென மாறும்.

பேஸ்ட்: நாம் தினமும் பல் துலக்க பயன்படுத்தும் பேஸ்டை அழுக்கு குழாய்கள் மீது தேய்த்து விடுங்கள். பத்து நிமிடம் கழித்து பழைய பிரெஷ் அல்லது ஸ்க்ரப்பரால் தேய்த்து தண்ணீரில் ஊற்றி கழுவினால், எந்த விதமான கரையாக இருந்தாலும், சுத்தம் ஆகிவிடும்.

வினிகர்: உங்கள் வீட்டில் வினிகர் இருந்தால், அதை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, அதனுடன் சிறிது தண்ணீர் சேர்க்கவும். பிறகு அதை ஸ்க்ரப்பால் தொட்டு அழுக்கான குழாய்கள் மீது தேய்க்க வேண்டும். பின்பு, ஐந்து நிமிடம் குழாயை தண்ணீரில் கழுவினால், குழாய்கள் புதியது போல் பளிச்சென்று மாறும். .

சமையல் சோடா, எலுமிச்சை சாறு: உங்களிடம் வினிகர் இல்லையென்றால், அதற்க்கு பதில் நீங்கள் சமையல் சோடா அல்லது எலுமிச்சை சாறை பயன்படுத்தலாம். இதற்க்கு நீங்கள், ஒரு பாத்திரத்தில் இரண்டு டேபிள்ஸ்பூன் பேக்கிங் சோடாவை எடுத்து அதில் ஒரு எலுமிச்சையை பிழிந்து விட்டு நன்கு கலக்கவும். இப்போது இந்தக் கலவையை உப்புக்கறை படிந்த குழாய்கள் மீது ஊற்றி, அதை எலுமிச்சை வைத்து தேய்த்தால் எத்தனை பழைய குழாயாக இருந்தாலும் புதிது போன்று ஜொலிக்கும். இப்படி நீங்கள் வாரம் ஒரு முறை செய்து வந்தால், உங்கள் பாத்ரூம் மற்றும் கிச்சன் குழாய்கள் எப்போதும் புதிது போன்று இருக்கும்.

No comments