Breaking News

12-ம் வகுப்பு பாஸ் போதும்.. ரூ.29000 சம்பளம்.. திருவண்ணாமலையில் அரசு வேலை வெயிட்டிங் !

 


திருவண்ணாமலை மாவட்ட கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளரின் கட்டுப்பாட்டிலுள்ள கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் காலியாக உள்ள விற்பனையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வந்துள்ளது.

முழு தகவல்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்.

பணிவிபரங்கள்:
நியாய விலைக்கடை விற்பனையாளர் (Salesman)
காலியிடங்கள்:

திருவண்ணாமலை மாவட்டத்திற்கு உட்பட்ட
  • தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் -119
  • வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் - 1
  • என மொத்தம் 120 விற்பனையாளர் காலியிடங்கள் உள்ளன.

ஊதியம்:

1. நியமன நாளிலிருந்து ஓராண்டு வரை தொகுப்பு ஊதியம் ரூ.6250/-
2. ஓராண்டுக்குப் பிறகு ஊதிய விகிதம் ரூ.8600-29000

தகுதி:

12ம் வகுப்பு தேர்ச்சி.
தமிழில் பேசவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.

: பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கு திருவள்ளூர் ரேஷன் கடைகளில் காத்திருக்கும் வேலை ! எப்படி விண்ணப்பிப்பது ?

வயது வரம்பு:

  • விண்ணப்பதாரர்கள் 1.07.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
  • ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியிைர்,மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்/ சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (முஸ்லீம்) மற்றும் இவ்வகுப்புகளைச் சார்ந்த முன்னாள் இராணுவத்தினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள், ஆதரவையற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை
  • இதர பிரிவினர் 32 வயது வரையும்,
  • இதர பிரிவு முன்னாள் இராணுவத்தினர் 50 வயது வரையும்
  • இதர பிரிவு மாற்றுத்திறனாளிகள் 42 வயது வரையும் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்ப கட்டணம்:

பொதுப்பிரிவினர்களுக்கு ரூ.150/-
ஆதிதிராவிடர் / பழங்குடியினர் / மாற்றுத்திறனாளிகள் / ஆதரவற்ற விதவைகள் / மூன்றாம் பாலினத்தவர்கள் - கட்டணம் இல்லை

தேர்வு செய்யும் முறை:

விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியில் பெற்ற மதிப்பெண்களுக்கு அளித்த மதிப்பு மற்றும் நேர்முக தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் ஆகியவற்றின் மொத்த மதிப்பெண்கள் அடிப்படையிலும் விண்ணப்பதாரர் சார்ந்துள்ள வகுப்புவாரியான இன சுழற்சி அடிப்படையிலும் தேர்வு செய்யப்படுவார்கள்.

முக்கிய தேதிகள்:

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி: 09.10.2024
விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.11.2024 மாலை 05.45 மணி

எப்படி விண்ணப்பிப்பது?

தகுதியும் விருப்பமும் கொண்ட நபர்கள் https://drbtvmalai.net/index.php என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை படித்துவிட்டு அதே இணையதளத்தின் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

No comments