பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 14.10.2024
பால்:பொருட்பால்
அதிகாரம் :நட்பு ஆராய்தல்
மருவுக மாசற்றார் கேண்மை;ஒன்று ஈத்தும்
ஒருவுக ஒப்பிலார் நட்பு.
பொருள்:குற்றமற்றவருடைய நட்பைக் கொள்ளவேண்டும்; ஒத்த பண்பு இல்லாதவருடைய நட்பை ஒன்றைக் கொடுத்தாவது கைவிடவேண்டும்.
A man of course never wants weapons
வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.
* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.
பொன்மொழி :
செல்லும் பாதை சரியாக இருந்தால் வேகமாக அல்ல மெதுவாக ஓடினாலும் வெற்றி தான்.
பொது அறிவு :
1. சிப்பியில் முத்து உருவாக்க சுமார் எத்தனை ஆண்டுகள் ஆகும்.
2. ”புதியதோர் உலகம் செய்வோம்” எனப் பாடி முழங்கியவர்?
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
மழையால் ஏரியில் தண்ணீர் நிரம்பி, கரையை உடைத்துக்கொண்டு செல்வதற்குமுன், ஒரே ஒருவர் மட்டும் ஏரிக்கரைக்குச்சென்று கடல்போல் கொந்தளிக்கும் ஏரிக்குள் குதிப்பார்.
அக்டோபர் 14
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 14 அன்று, ISO (தர நிர்ணயத்திற்கான சர்வதேச அமைப்பு), IEC (சர்வதேச மின்தொழில்நுட்ப ஆணையம்) மற்றும் ITU (சர்வதேச தொலைத்தொடர்பு ஒன்றியம்) ஆகியவற்றின் உறுப்பினர்கள் உலக தர நிர்ணய தினத்தைக் கொண்டாடுகிறார்கள், இது சர்வதேச தரங்களாக வெளியிடப்படும் தன்னார்வ தொழில்நுட்ப ஒப்பந்தங்களை உருவாக்கும் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிபுணர்களின் கூட்டு முயற்சிகளுக்கு பாராட்டு தெரிவிக்கும் ஒரு தினமாக கொண்டாடப்படுகின்றது.
நீதிக்கதை
எழுதத் தெரிந்த புலி
காட்டிலிருந்து பிடிபட்டு கொண்டுவரப்பட்ட புலி ஒன்று சர்க்கஸ் கூண்டிற்குள் அடைக்கப்பட்டிருந்தது. கூண்டில் அடைக்கப்பட்ட மற்ற மிருகங்களைப்போல இல்லாமல் பகலும் இரவும் அந்தப்புலி நடந்து கொண்டேயிருந்தது. ஏன் அப்படி கூண்டிற்குள் அலைகிறது என்று எவருக்கும் தெரியவில்லை.
ஒரு நாள் எங்கிருந்தோ ஊர்ந்து வந்த நத்தையொன்று புலிக்கூண்டின் மீது உட்கார்ந்தபடியே அதை பார்த்துக் கொண்டிருந்தது. புலி ஒய்வில்லாமல் வட்டமாக சுற்றிக் கொண்டிருப்பதைக் கண்டு எதற்காக இப்படி சுற்றிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டது. அதற்கு புலி பதில் சொல்லவில்லை.
உடனே நத்தை ‘ கூண்டிற்குள் அடைபட்டுக் கிடக்க பயமாக இருக்கிறதா என்று கேட்டது. அதற்கு புலி நான் சுற்றிக் கொண்டிருக்கவில்லை. எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றது. நத்தைக்கு அது புரியவில்லை.
எப்படி என்று கேட்டது. கூண்டிற்குள் அடைபட்ட பிறகு வாழ்க்கையில் எதுவும் மிச்சமிருப்பதில்லை. பூஜ்யமாகி விடுகிறோம். இப்போது நான் மாட்டிக் கொண்டிருக்கிறேன், அதனால் என் வாழ்க்கை வெறும் பூஜ்யம் அதை நான் மறந்துவிடாமல் இருக்கவே சுற்றி சுற்றி நடந்து கொண்டேயிருக்கிறேன், எனது நடை பூஜ்யத்தை எழுதுவது தான்.
இப்படி நினைவு கொள்ளாவிட்டால் இந்தக் கூண்டு பழகிப்போகும். அவர்கள் போடும் உணவு பழகிப் போகும், என்னை வேடிக்கை பார்ப்பவர்கள் முகம் பழகிப்போகும். பிறகு நான் கூண்டுப்புலியாக சுகமாக வாழப் பழகிவிடுவேன். அது அவமானம். அப்படி வாழக்கூடாது. அது ஒரு இழிவு. ஆகவே நினைவில் உள்ள காட்டை ஒருபோதும் நான் மறக்க கூடாது.
இப்போது முடக்கப்பட்டு நான் அடையாளமற்றுப் போயிருக்கிறேன் என்ற உண்மை மனதில் இருந்து கொண்டேயிருந்தால் மட்டுமே விடுதலையைப் பற்றிய நினைவு வளர்ந்து கொண்டேயிருக்கும்.
அதற்காகவே பகலும் இரவும் வட்டமாகச் சுற்றி வந்தபடியே எழுதிக் கொண்டிருக்கிறேன் என்றபடி புலி நடக்கத் துவங்கியது.
மேலும்,நான் அடைபட்டுக் கிடந்த போதும் என் குரல் அடைக்கப்படவில்லை. கேள் என் ரௌத்திரத்தை என்றபடியே புலி உறுமியது.
அந்த குரலின் ஆழத்தில் புலியின் மனதில் இருந்த காடும் அதன் நினைவுகளும் எழுந்து அடங்கியது.. மேலும்,புலியின் விடுதலையும் வெகு தூரத்தில் இல்லை என்பதையும் காட்டியது.
நீதி :நாமும் நம்முடைய வாழ்க்கை இலட்சியத்தை தினம் தினம் நம் மனதில் நினைத்துக் கொண்டிருந்தால் கண்டிப்பாக ஒரு நாள் நம்மால் வெற்றி பெற முடியும்.
இன்றைய செய்திகள்
No comments