பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.10.24
Anger is sworn enemy .
தீராக் கோபம் போராய் முடியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
* எண்ணம் போல் வாழ்க்கை என்பர் பெரியோர். எனவே நல்ல எண்ணங்களை மனதில் கொண்டு சிறப்பாக வாழ்வேன்.
* பள்ளியிலிருந்து வெளியிடங்களில் நடைபெறும் போட்டிகளுக்கு என்னை அழைத்துச் சென்றால், பயப்படாமல் பங்கேற்று வெற்றி பெறுவேன்.
பொன்மொழி :
சுமைகளை கண்டு நீ துவண்டு விடாதே! இந்த உலகத்தை சுமக்கும் பூமியே உன் காலடியில் தான் ..!-----விவேகானந்தர்
பொது அறிவு :
1. உலகில் மிக அதிகமாக விளையும் காய்கறி எது ?
விடை : உருளைக்கிழங்கு.
2. பள்ளிக்கூடத்தை முதன்முதலில் உருவாக்கியவர்கள் யார்?
விடை : ரோமானியர்கள்
English words & meanings :
வேளாண்மையும் வாழ்வும் :
ஏரி அல்லது கண்மாயில் இருந்து மடை திறக்கப்பட்டு ஓடை வழியாக விவசாய நிலங்களுக்கு செல்லும்.
அக்டோபர் 16
உலக உணவு நாள் (World Food Day)
உலக உணவு நாள் (World Food Day) ஆண்டு தோறும் அக்டோபர் 16 ஆம் நாளன்று உலக நாடுகளில் கொண்டாடப்படுகிறது. 1945 ஆம் ஆண்டில் இதே நாளில் ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு ஆரம்பிக்கப்பட்டதை நினைவு கூர ஐநா இந்நாளைச் சிறப்பு நாளாக அறிவித்தது. நவம்பர் 1979 ஆம் ஆண்டில் இவ்வமைப்பின் 20வது பொது மாநாட்டில் இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. ஹங்கேரியின் முன்னாள் வெளிநாட்டமைச்சர் பால் ரொமானி என்பவரின் முன்முயற்சியினால் இத்தீர்மானம் ஏகமனதாக ஏற்கப்பட்டு தற்போது 150ற்கும் அதிகமான நாடுகளில் இந்நாள் கொண்டாடப்படுகிறது.
2008 ஆம் ஆண்டிற்கான உலக உணவு நாளின் கருப்பொருள் "உலக உணவுப் பாதுகாப்பு: காலநிலை மாற்றம் மற்றும் உயிரியல் ஆற்றலுக்கான சவால்கள்" என்பதாகும்.
நீதிக்கதை
யார் சிறந்தவன்?
டில்லி பாதுஷா திரும்பவும் ஒருமுறை அப்பாஜியின் அறிவைப் பரிசோதிக்க விரும்பினார்.
அதன்படி ஒரே மாதிரியாக உள்ள மூன்று வெண்கலச்சிலைகளை ராயரது சபைக்கு அனுப்பி “இம்மூன்று சிலைகளிலுள்ள மனிதரின் உருவங்களில் யார் உத்தமன், யார் மத்திமன், யார் அதமன் என்பதைக் கண்டுபிடித்து அந்த சிலைகளில் எழுதி திருப்பி அனுப்ப வேண்டும். அப்போதுதான் விஜயநகர அரசின் அறிவை நாங்கள் மதிப்போம் !” என்று தனது தூதர்களிடம் சொல்லி அனுப்பினார்.
ஒரேமாதிரியான மூன்று சிலைகளையும் கவனித்து ராயர் வியப்படைந்து அச்சிலைகளை தம் சபையில் வைத்து அவற்றின் குணாதிசயங்களை சோதித்துக் கூறும்படி கட்டளையிட்டார்.
மூன்று சிலைகளும் ஒரு சிறிதும் உருவ வேறுபாடின்றி ஒன்று போலவே இருந்தமையால் முடிவு சொல்ல முடியாமல் சபையினர் திண்டாடினர்.
கடைசியில் அப்பாஜி அம்மூன்று சிலைகளையும் கூர்ந்து கவனித்த போது மூன்று சிலைகளின் காதுகளிலும் துவாரமிருப்பது அவருக்கு தெரிந்தது. உடனே மெல்லிய ஈர்க்குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு முதல் சிலையில் உள்ள காது துவாரத்தில் நுழைந்தார். அந்தக் குச்சி வாய்வழியாக வந்து வெளிப்பட்டது. திருப்தி அடைந்த அப்பாஜி, அடுத்த சிலையில் அதே குச்சியை ஒரு காதுக்குள் நுழைத்த போது அது மற்றொரு காது வழியாக வந்து வெளிப்பட்டது. கடைசியாக மூன்றாவது சிலையின் காதுக்குள் விடப்பட்ட குச்சி வெளியே வரவில்லை உள்ளுக் குள்ளே தங்கி விட்டது. உடனே அப்பாஜி புன்னகையுடன் விவரித்தார்.
ஒரு காதில் வாங்கி தன் இரகசியங்களை வாயால் வெளிப்படுத்துபவன் அதமன் ! அந்த இரகசியத்தை ஒரு காதில் வாங்கி மற்றொரு காதின் வழியாக விட்டு விடுபவன் மத்திமன் ! மற்றவர் சொன்ன இரகசியத்தை வெளியே விடாமல் உள்ளுக்குள்ளேயே அடங்கி வைப்பவன் தான் உத்தமன் !” அவனே சிறந்தவன் என்று மூன்று சிலைகளின் கீழ் முறையே ” அதமன், மத்திமன், உத்தமன் ! ” என்று எழுதி அனுப்பினார்.
அதைக் கண்ட டில்லி பாதுஷா அப்பாஜியினது அறிவாற்றலை எண்ணி அசந்து போனார்.
நீதி: அறிவுகூர்மையுடன் யோசித்து செயல்பட்டால் வெற்றி நிச்சயம்
இன்றைய செய்திகள்
No comments