Breaking News

ஆண்டிற்கு ரூ. 250 முதல் முதலீடு. உங்கள் மகள் திருமண வயதின் போது ரூ. 71 லட்சம் வரை திரும்ப பெறும் தபால் அலுவலக திட்டம்!

 

ற்போதைய காலகட்டத்தில் மக்கள் முதலீடு செய்வதை அதிகமாக விரும்புகின்றனர். FD, பேங்க், பங்குச்சந்தை போன்ற பல இடங்களில் மக்கள் முதலீடு செய்கின்றனர்.

பங்குச்சந்தையில் அதிகமான விருப்பத்தை மக்கள் கொண்டிருந்தாலும் அரசு திட்டங்களில் முதலீடு செய்யும் போது பல நன்மைகள் கிடைக்கும். வரிசலுகையுடன் அதிக வட்டி விகிதத்துடன் திரும்பப் பெரும் தொகையும் நமக்கு கணிசமாக கிடைக்கும். அப்படி ஒரு தபால் அலுவலக திட்டத்தை பற்றி இனி காண்போம்.

ஒவ்வொரு வீட்டிலும் பெண் குழந்தைகள் இருந்தால் சேமிப்பு கட்டாயம் தேவை. இந்திய பாரம்பரியத்தின்படி பெண் குழந்தைகளை வைத்திருப்பவர்களுக்கு திருமணம் மிகப்பெரிய செலவுதான். அதனால் பெண் பிள்ளைகள் வைத்திருப்பவர்கள் சிறு வயதிலேயே ஒரு சேமிப்பை தொடங்கி விட்டால் அவர்கள் திருமண வயது அடையும் போது ஒரு கணிசமான தொகையை சேர்க்க முடியும். அப்படி மக்களுக்கு பயன்படும் வகையில் மத்திய அரசு ஆரம்பித்திருக்கும் திட்டம் தான் சுகன்யா சம்ருதி யோஜனா தபால் அலுவலக திட்டம். இந்த திட்டம் பெண் பிள்ளைகளுக்காக தொடங்கப்பட்டது.

நம் நாட்டில் உள்ள எந்த ஒரு குடிமகனும் ஒன்றிலிருந்து பத்து வயதிற்கு உள்ளாக வைத்திருக்கும் பெண் பிள்ளைகளுக்காக இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம். இந்த சுகன்யா சம்ருதி யோஜனா திட்டத்தின் கீழ் ஆண்டிற்கு குறைந்தபட்சம் ரூபாய் 250 டெபாசிட் செய்யலாம். அதிகபட்சமாக ஒன்றரை லட்சம் ரூபாய் வரை டெபாசிட் செய்யலாம்.

மத்திய அரசு தொடங்கி இருக்கும் திட்டங்களில் அதிக வட்டி கிடைக்கும் திட்டங்களில் சுகன்யா சம்ருதி யோஜனா திட்டம் ஒன்றாகும். இந்த கணக்கு தொடங்குபவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட தொகையை சில வருடங்களுக்கு முதலீடு செய்வதன் மூலம் உங்கள் மகளின் திருமண வயதான 21 வயதை அடையும்போது 71 லட்சத்துக்கும் மேலாக உங்களால் டெபாசிட் பணத்தை திரும்ப பெற முடியும்.

இந்த சுகன்யா சம்ரத்தி யோஜனா திட்டத்தை எந்த தபால் அலுவலகத்தின் கிளையிலும் தொடங்கலாம். இதில் மொத்தம் 15 ஆண்டுகளுக்கு நீங்கள் முதலீடு செய்ய வேண்டும். 21 ஆண்டுகள் நிறைவடைந்த உடன் முழு தொகையும் முதிர்ச்சி வட்டியுடன் சேர்த்து உங்களுக்கு திரும்ப கிடைக்கும். இந்த திட்டத்தில் நீங்கள் சேர்ந்த பிறகு ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் ஐந்தாம் தேதிக்கு முன் நீங்கள் விரும்பும் தொகையை டெபாசிட் செய்ய வேண்டியதுஅவசியம்.

நீங்கள் ரூபாய் 250 இல் இருந்து உங்கள் விருப்பப்படி பணத்தை டெபாசிட் செய்யலாம். நீங்கள் டெபாசிட் செய்யும் தொகைக்கு ஏற்ப உங்களுக்கு முதிர்வு தொகை கிடைக்கும். நீங்கள் அதிகபட்ச தொகையான ஒன்றரை லட்ச ரூபாய் வருடத்திற்கு ஒருமுறை டெபாசிட் செய்தால் உங்கள் மகள் 21 வயது எட்டிய பிறகு முதுச்சியின் போது உங்களுக்கு 71,82,119 ரூபாய் கிடைக்கும். இதில் உங்களுக்கு வட்டி மட்டுமே 49 லட்சத்து 32,119 ரூபாய் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் முதிர்வு காலத்தில் நீங்கள் திரும்பப்பெறும் இந்த தொகைக்கு முற்றிலும் வரிவிலக்கு அளிக்கப்படும்.

No comments