Breaking News

ரூ.333 முதலீட்டுக்கு ரூ.17 லட்சம் கிடைக்கும்.. முதலீட்டுக்கு அதிக லாபம் தரும் அசத்தல் திட்டம்!

 


ருவர் தங்களுடைய வருமானத்தில் ஒரு பகுதியை சேமிப்பது நிதி பாதுகாப்புக்கு மிகவும் முக்கியம். இன்றெல்லாம் மக்கள் பலரும் ஆபத்து இல்லாத முதலீட்டை நோக்கி நகர்கின்றனர்.
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களை விட குறைந்த ஆபத்துள்ள மற்றும் அதிக வருமானம் தரும் அரசாங்கத் திட்டங்களில் அதிகம் முதலீடு செய்கின்றனர். இவற்றில் போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டமும் ஒன்று. இந்தத் திட்டத்தின் கீழ் எப்படி ரூ.17 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறலாம்? என்பதைப் பார்ப்போம்.

போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டம் மற்ற அனைத்து திட்டங்களைப் போலவே பாதுகாப்பான அதேசமயம் உத்தரவாதமான வருமானம் வழங்கும் அரசாங்கத் திட்டம் ஆகும். குறைந்த ஆபத்து உள்ள சேமிப்பு திட்டத்தை விரும்புவோருக்கு இது சிறந்த தேர்வாக அமைகிறது. இருப்பினும் மாதாந்திர தவணைகளை சரியான நேரத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். நீங்கள் ஒரு தவணையை தவறவிட்டாலும் மாதத்திற்கு 1 சதவீதம் அபராதம் விதிக்கப்படும்.

தொடர்ந்து 4 தவணைகளை தவறவிட்டால் கணக்கு தானாகவே மூடப்படும். இந்தத் திட்டத்தின் முதிர்வு காலம் 5 ஆண்டுகள். அதாவது நீங்கள் தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்ய வேண்டும். அதன் பிறகு வட்டியும், அசலும் சேர்த்து பெற்றுக் கொள்ளலாம்.

ரூ.100 ரூபாய் முதல் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய முடியும். இந்த சிறு சேமிப்பு திட்டத்தில் முதலீடு செய்ய அருகில் உள்ள போஸ்ட் ஆபீஸ்களை அணுகலாம். தற்போது போஸ்ட் ஆபீஸ் ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திற்கு 6.8 சதவீத வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதிக வருமானத்தை வளர்க்க விரும்பும் முதலீட்டாளர்கள் சற்று கூடுதலாக முதலீடு செய்ய வேண்டும்.

ஆனால் குறைந்தபட்ச முதலீடு ரூ.100 ரூபாய் மட்டுமே. அதன் பிறகு எவ்வளவு முதலீடு செய்ய வேண்டும் என்பது முதலீடு செய்பவரை பொறுத்தது. ரூ.17 லட்சத்தை உருவாக்க எப்படி முதலீடு செய்வது?: ரூ.17 லட்சத்தை உருவாக்க ஒரு நபர் தினசரி ரூ.333 ரூபாயை சேமிக்க வேண்டும். அதாவது மாதத்திற்கு ரூ.10,000 ரூபாயை முதலீடு செய்வதன் மூலம் உங்களால் ரூ.17 லட்சத்தை உருவாக்க முடியும்.

மாதத்திற்கு 10,000 ரூபாய் என்றால் ஒரு ஆண்டுக்கு ரூ.1.20 லட்சத்தை சேமித்திருப்பீர்கள். அப்படியானால் 5 ஆண்டுகளில் உங்களுடைய மொத்த முதலீடு 5,99,400 ரூபாயாக இருக்கும். 5 ஆண்டுகளுக்கும் 6.8 சதவீத வட்டி விகிதம் வழங்கப்பட்டால் மொத்தமாக 1,15,427 ரூபாய் வட்டி கிடைக்கும். ஆக மொத்தம் முதிர்வுத் தொகையாக ரூ.7,17,827 ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.

அதன் பிறகு உங்களுடைய முதலீட்டை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்தால். அதாவது ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் 5 ஆண்டுகள் நீட்டித்தால் உங்களுடைய மொத்த டெபாசிட் ரூ.12 லட்சமாக இருக்கும். இதற்கு வட்டியாக ரூ.5,8,546 கிடைக்கும். 10 ஆண்டுகளுக்கு பிறகு மொத்த முதிர்வுத் தொகை ரூ.17,18,546 ரூபாயாக இருக்கும்.

பிபிஎஃப் திட்டத்திற்கான முதிர்வு காலம் 15 ஆண்டுகள். 15 ஆண்டுகளை தேர்வு செய்து முதலீடு செய்யும் முதலீட்டாளர்களும் உண்டு. எனவே இந்த 10 ஆண்டுகளில் கணிசமான தொகையை சேமிக்க முடியும் என்றால் அது நிச்சயம் நன்மை தானே!

No comments