Breaking News

இடி, மின்னல் அடிக்கும்போது.. தப்பி தவறியும் செய்ய கூடாத 4 விஷயங்கள்! பாதுகாப்பாக இருப்பது எப்படி?

 


சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் நாளை முதல் அடுத்த சில நாட்களுக்குக் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கனமழை பாதிப்பைக் குறைக்கத் தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்கிடையே இடி மின்னல் அடிக்கும் போது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன.. செய்யக் கூடாதவை என்ன என்பது குறித்த முக்கிய தகவல்களைச் சென்னை மாநகராட்சி பகிர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை சீசனில் நல்ல மழை பெய்தது. மாநிலத்தில் பல்வேறு பகுதிகளிலும் நல்ல மழை இருந்தது. இப்போது வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், சென்னை உட்பட வட மாவட்டங்களில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது.

கனமழை: கனமழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுவதால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி ஐடி ஊழியர்கள் முடிந்த வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. கனமழை பெய்தால் நிலையைச் சமாளிக்கத் தேவையான பல்வேறு நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது.

மாநகராட்சி அறிவிப்பு: அதேபோல சென்னை மாநகராட்சியும் தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. சென்னையில் மக்கள் மழை சார்ந்த புகாரை 1913 என்ற எண்ணைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே இடி மின்னல் அடிக்கும் போது பொதுமக்கள் செய்ய வேண்டியது என்ன.. செய்யக் கூடாதவை என்ன என்பது குறித்த முக்கிய தகவல்களைச் சென்னை மாநகராட்சி பகிர்ந்துள்ளது.

செய்ய வேண்டியவை

  • இடி மின்னல் அடிக்க தொடங்கினால் உடனடியாக பாதுகாப்பான தங்குமிடத்திற்குச் செல்லுங்கள்.. உலோக கட்டுமானம் அல்லது உலோக ஷூட் கொண்ட கட்டுமானங்களைத் தவிர்க்கவும்.
  • தாழ்வான பகுதியில் இருப்போர் வெள்ளம் வராத இடங்களைக் கண்டறிந்து அங்குச் சென்று பாதுகாப்பாக இருக்கவும்.
  • கழுத்தின் பின்புறத்தில் முடி நிற்பது போல.. அதாவது புல்லரிப்பது போல மாறினால் மின்னல் விரைவில் தாக்கப் போகிறது என்று அர்த்தம்.
  • இடி மின்னல் அடிக்கும் போது அருகில் உள்ள கட்டிடத்திற்குச் செல்வதே சிறந்தது. ஒருவேளைப் பொதுவெளியில் மாட்டிக் கொண்டால்.. கை, கால்களை ஒன்றாகச் சேர்த்துக் குனிந்து தலையைக் கீழே பார்க்கும்படி உட்கார்ந்து கொள்ளவும். இது மின்னல் தாக்கும் அபாயத்தைக் குறைக்கும்.

செய்ய கூடாதவை

  • திறந்த வெளியில் மாட்டிக் கொண்டால் தரையில் படுக்கக் கூடாது.. மேலே கூறப்பட்ட முறையைத் தான் பின்பற்ற வேண்டும். தரையில் படுத்தால் அது உங்களைப் பெரிய இலக்கை காட்டும்.
  • தொலைப்பேசி, மின்சாரம் உள்ளிட்ட லைன் ஒயர்கள், இரும்பு வேலிகள், மரங்கள் மற்றும் மலை உச்சிகளிலிருந்து விலகி இருங்கள்.
  • மரங்களுக்கு அடியில் தஞ்சம் அடைய வேண்டாம்.. ஏனென்றால் மின்னல் எளிதாக இதுபோன்ற மரங்களைத் தாக்கும்.
  • ரப்பர் ஷூக்கள் மற்றும் கார் டயர்கள் மின்னலில் இருந்து பாதுகாப்பை வழங்காது. எனவே, அதை நம்பி வெளியே செல்ல வேண்டாம்.
  • இந்த வழிகாட்டுதல்களை எல்லாம் பின்பற்றிப் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

அமைச்சர்கள்: முன்னதாக வடகிழக்குப் பருவமழையினை முன்னிட்டு, பெருநகர சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகையில் உள்ள 1913 கட்டுப்பாட்டு மையத்தை நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு, மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

No comments