Breaking News

இரண்டில் எந்த படகு முதலில் மூழ்கும்.. 99% பேர் பதில் தவறு.. உங்கள் பதில் என்ன?

 

வ்வொரு நாளும் ஒன்றுக்கு மேற்பட்ட ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் சமூக ஊடகங்களில் காணப்படுகின்றன. இதுபோன்ற படங்களைப் பார்த்து பெரும்பாலானோர் குழப்பமடைகின்றனர்.
ஆப்டிகல் இல்யூஷன் புகைப்படங்கள் வெறுமனே கண்களை ஏமாற்றும் புகைப்படங்களைக் குறிக்கின்றன. இந்தப் படங்களில் கொடுக்கப்பட்டுள்ள சவால்களை மக்கள் ரசிக்கிறார்கள். ஆனால் பெரும்பாலான மக்கள் இந்த சவாலுக்கு தீர்வு காண தவறிவிடுகிறார்கள். இன்று உங்களுக்காக ஒரு மனதைக் கவரும் ஆப்டிகல் இல்யூஷன் படத்தைக் கொண்டு வந்திருக்கிறோம்.

ஆப்டிகல் இல்யூசன் புகைப்படங்கள் நம்முடைய மூளையின் செயல்களை துரிதமாக அதிகரிக்க உதவுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதன் மூலம் ஒருவரின் அறிவுத்திறன், உணர்ச்சி வெளிப்பாடுகள், பிரச்சனைகளை தீர்க்கும் திறன் போன்றவற்றை தெரிந்துகொள்ள முடியும். அப்படியொரு புதிரான படத்தை தான் இப்போது பார்க்கப் போகிறோம். இந்தப் படத்தில் உள்ள விடைகளை எவ்வளவு விரைவாகக் கண்டுபிடிக்கிறீர்களோ, அவ்வளவுக்கு உங்கள் மூளை கூர்மையாக இருக்கிறது என்று அர்த்தம். இப்போது இந்த வைரலான படத்தை கவனமாக பார்த்து அதில் எந்த படகில் உள்ள நபர் முதலில் மூழ்குவார் என்று சொல்லுங்கள் பார்ப்போம். உங்களால் 5 வினாடிகளில் கண்டுபிடிக்க முடியுமா? உங்களுக்கான சவால் இதோ..



யார் முதலில் மூழ்குவார்கள் என்று நினைக்கிறீர்கள்?:

இது உங்களுக்கான ஒரு பொழுதுபோக்கு விளையாட்டு. ஒரு ஏரியில், இரண்டு பேர் வெவ்வேறு படகுகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஒரு படகில் இரண்டு துளைகளும், மற்றொன்றில் ஒரு துளையும் உள்ளன. யார் முதலில் மூழ்குவார்கள் என்பதைத் தீர்மானிக்க உங்களுக்கு ஐந்து வினாடிகள் உள்ளன, இது உங்களுக்கான சவால்!

உங்கள் லாஜிக்கை பயன்படுத்தி அந்த படத்தை நன்றாக உற்று பாருங்கள். ஒரு புகைப்படத்தை பார்த்து நாம் எவ்வளவு நேரத்தில் விடையை கண்டுப்பிடிக்கிறோம் என்பதைப் பொறுத்து ஒருவரின் ஐக்யூ லெவலை கண்டறிய முடியும் என கூறப்படுகிறது. ஐந்து விநாடிகளுக்குள் விடை கண்டுபிடிக்க முடிந்தால் வாழ்த்துகள்! உங்களுக்கு கவனிக்கும் திறன் அதிகமாக உள்ளது என்று அர்த்தம்.
 
இந்த ஆப்டிகல் இல்யூஷன்க்கு பதில் சொல்லுங்கள்:

5 வினாடிகளில் நீங்கள் கண்டுபிடித்து இருந்தால், உங்களில் கண் பார்வை மிகவும் கூர்மையாக உள்ளது என அர்த்தம். அதுவே உங்களால் 5 வினாடிகள் கடந்தும் கண்டுபிடிக்க முடியவில்லையா? கவலைப்பட வேண்டாம். தொடர்ந்து கவனம் செலுத்த முயற்சி செய்தால், வரும் காலங்களில் உங்களில் கண் திறனை மேம்படுத்த முடியும். சரி இப்போது எந்த படகு முதலில் மூழ்கும் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

முதலில் மூழ்கும் படகு B. ஒரே ஒரு ஓட்டை இருந்தாலும், படகில் எவ்வளவு தண்ணீர் இருக்கிறது என்பதைக் கவனியுங்கள். எனவே இது விரைவாக மூழ்கிவிடும்.

No comments