Breaking News

இனி பணம் எடுக்க ATM வரிசையில் நிற்க தேவையில்லை!! 'ஆதார்' இருந்தால் வீட்டில் இருந்தபடியே எடுக்கலாம்!!

 


லக நாடுகளை ஒப்பிடுகையில் இந்தியா டிஜிட்டல் தொழில் நுட்பத்தில் முன்னேறி வருகிறது.நகர்புறங்கள் மட்டுமின்றி கிராமபுறங்களிலும் டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் சேவைகள் வழங்கப்படுகிறது.

கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் காகிததாள் பணப் பரிமாற்றம் மட்டுமே இருந்து வந்த நிலையில் தற்பொழுது காகிதமில்லா அதாவது ஆன்லைன் பணப் பரிமாற்றம் அதிகரித்து விட்டது.டீ கடை முதல் பெரிய வணிக மையங்கள் வரை அனைத்து இடங்களிலும் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்படுகிறது.

அதேபோல் தாற்பொழுது ஊதியம்,பென்ஷன் போன்றவை வங்கி கணக்கிற்கு அனுப்பப்படுவது அதிகரித்த வண்ணம் உள்ளது.இதனால் அனைவரும் வங்கி கணக்கு தொடங்கி ATM மூலம் பணம் எடுத்தல்,பரிவர்த்தனை செய்தல் போன்றவை அதிகம் நடைபெற்று வருகிறது.

ATM-இல் பணம் எடுப்பதற்கு மாற்றாக "ஆதார் ஏடிஎம்கள்" என்ற சேவையை மத்திய அரசு வழங்கி வருகிறது.இந்த ஆதார் ஏடிஎம் மூலம் வீட்டில் இருந்தபடி பணத்தை எளிதில் பெற முடியும்.அதற்கு உங்கள் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.

இந்த ஆதார் ATM மூலம் தங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.10000 வரை கட்டமின்றி பணம் எடுக்க முடியும்.இதற்கு நீங்கள் நீங்கள் IPPB இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.பிறகு போஸ்ட்மேன் தங்கள் இல்லத்திற்கு வந்து பயோமெட்ரிக் அடையாளங்களை சரிபார்த்த பிறகு பணம் வழங்குவார்.

முதலில் https://ippbonline.com என்ற இணையதளப் பாக்கத்தில் உள்ள Door Step Banking என்ற லிங்க்கை கிளிக் செய்ய வேண்டும்.பிறகு அதில் பெயர்,மொபைல் எண்,முகவரி உள்ளிட்ட சுயவிவரங்களை பதிவிட வேண்டும்.

அதன் பிறகு தங்களுக்கு அருகிலுள்ள போஸ்ட் ஆப்ஸின் பெயர் மற்றும் எடுக்க வேண்டிய தொகை குறித்து பதிவிட வேண்டும்.பிறகு உங்கள் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் விவரங்களை பதிவிடவும்.பிறகு I AGREE என்பதை கிளிக் செய்ய வேண்டும்.பிறகு உங்கள் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதும் நீங்கள் பதிவு செய்த தொகை உங்கள் வீட்டிற்கே வந்து வழங்கப்படும்.

No comments